குவியும் சுற்றுலா பயணிகள்: மீண்டும் களை கட்டுகிறது கன்னியாகுமரி!
கன்னியாகுமரி:
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேற்று தான் கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி தாக்குதலினால் சிதிலமடைந்த பகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்று. சுனாமி பீதி காரணமாககன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அடியோடு குறைந்து போய் விட்டது.
மேலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் 2 படகுகளும் நிறுத்தப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் குறைந்து போய்வெறிச்சோடியது குமரி.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் 2 படகுகளும் சரி செய்யப்பட்டு மீண்டும் தங்களது பணியை தொடங்கின. இதைத் தொடர்ந்துசுற்றுலாப் பயணிகள் வருகை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
சில நாட்களுக்கு முன் மீண்டும் சுனாமி பீதி பரவினாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தே வந்தது. இந் நிலையில் நேற்றுஇதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வருகை தந்தனர்.
வெளிநாட்டுப் பயணிகள் உள்பட ஏராளமான அளவு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குமரியில் குவிந்தனர். இதனால் ஊரே களைகட்டியது. ஏராளமான சுற்றுலாப் பேருந்துகள், வேன்கள் குமரி கடற்கரையை நிறைத்தன.
இதே நிலை நீடித்தால் கன்னியாகுமரி மிக விரைவிலேயே மீண்டும் தனது பழைய பொலிவைப் பெற்றுவிடும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications