லஞ்சம் வாங்கினால் குண்டு போடுவோம் !
கும்பகோணம்:
லஞ்சம் வாங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் நாளை குண்டு வெடிக்கும் என்று கும்பகோணம் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கும்பகோணத்திலுள்ள வணிக வரித்துறை உதவி ஆணையருக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதில், தங்கள் பெயரையும், துணை ஆணையர் பெயரையும் பயன்படுத்தி கீழ்மட்ட அதிகாரிகள் நடத்தும் லஞ்ச வேட்டையை பல முறை கண்டித்தோம்.
ஆனால் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.உங்களைத் திருத்த வேறு வழி தெரியவில்லை.
எனவே உங்களது அலுவலகத்தில் குண்டு வைத்துள்ளோம். அது 26-ந் தேதி வெடிக்கும். இவண்: வியாபாரி, தி.க.இ. அணி. லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸார் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்து அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் கும்பகோணம் வணிகவரித்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரமணா ஸ்டைல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆட்களா நம்மவர்கள்?
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications