வெளியிலிருந்து ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் கொடுத்து வரும் நெருக்கடி குறித்து விவாதிக்க, திமுக உயர் மட்ட செயல் திட்டக்கூட்டத்தை கருணாநிதி நாளை (27ம் தேதி) கூட்டியுள்ளார்.

சென்னையில் நடக்கும் இக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக மத்திய அமைச்சர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். திங்கள்கிழமைநாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சர்களை சென்னைக்கு திமுக வரவழைத்துள்ளதுகாங்கிரஸை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுகவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்த இக் கூட்டம் திடீரென கூட்டப்பட்டிருப்பது பல கேள்விகளைஎழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர்களாக உள்ள டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் மட்டுமே இக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.ஆனால், இதில் அனைத்து மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி.

இக் கூட்டத்தில் காங்கிரசுக்கு பதிலடி தருவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசிப்பார் என்று தெரிகிறது. காங்கிரஸ்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் சில நடவடிக்கைகளை திமுக எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் ஒன்று, மத்தியில் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற ஆயுதம்.

மூத்த திமுக தலைவர் ஒருவர் கூறுகையில், சோனியா காந்தியும், சுர்ஜீத் சிங்கும் வலியுறுத்திய காரணத்தால்தான் திமுக அமைச்சரவையில்சேர்ந்தது. ஆனால் இதையெல்லாம் திரித்து, காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது நியாயமற்றது.

அவர்கள் தொடர்ந்து இப்படிப் பேசிக் கொண்டிருந்தால், எங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆட்சியிலிருந்து விலகிவெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்படும். அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.

இதற்கிடையே, அப்படிப்பட்ட முடிவுக்கு திமுக போய்விடாமல் தடுக்க காங்கிரஸ் தரப்பில் இருந்தும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

தயாநிதி மாறனிடம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் பேச்சு நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால் கருணாநிதியுடன் பிரதமர்மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி தொலைபேசியில் பேசுவர் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+