சாட்சிகளை கலைக்க ஜெயேந்திரர் முயற்சி: காஞ்சி. போலீஸ்
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளை மிரட்டி கலைக்க ஜெயேந்திரர் முயற்சி செய்து வருகிறார் என்று சிவகாஞ்சி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் முனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் புகார் தெரிவித்தார்.
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இதையடுத்து நான்கு பேரும் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் தன்னையும் கைது செய்ய போலீஸார் முயற்சிக்கலாம் என்று கருதும் ஜெயேந்திரர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சிவகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முனியப்பன் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஜெயேந்திரர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் தற்போது கலவையில் தங்கியிருந்து கொண்டு சாட்சிகளை கலைக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் அவர் முயற்சித்து வருகிறார்.
இரு பெண் வழக்கறிஞர்கள் ரவி சுப்பிரமணியத்த சந்தித்து மிரட்டியுள்ளனர். ஜெயேந்திரருக்கு ஆதரவாக மாறினால் பெரும் தொகைகிடைக்கும், இல்லாவிட்டால், உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவரைமிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சித்ரா புகார் கொடுத்தார். அவரது புகாரின் அடிப்படையில்தான் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஜெயேந்திரர் மெளன விரதம் இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. அவரை தினசரி வழக்கறிஞர்கள் சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.
சாட்சிகளைக் கலைக்க வழக்கறிஞர்கள் மூலம் ஜெயேந்திரர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அவரது நடவடிக்கைகளைப்பார்க்கும்போது, அவரது ஜாமீனை ரத்து செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே ஜெயேந்திரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாதுஎன்று முனியப்பன் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு நீதிபதி தணிகாச்சலம் ஒத்திவைத்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications