ஆட்சியில் பங்கு கோஷம்: காங்கிரஸின் திருவிளையாடல்?
சென்னை:
காங்கிரஸ் மேலிட ஆதரவுடன்தான், தமிழகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை சமீபத்தில்கிளப்பினார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், அதில்காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு குண்டைப்போட்டார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனும் இதே கோரிக்கையை வழி மொழிந்தார். இது திமுக வட்டாரத்தில் பெரும்பரபரப்பைக் கிளப்பியது. முதலில் அமைதியாக இருந்த திமுக பின்னர் தனது அதிருப்தியை காங்கிரஸ் மேலிடத்திடம் வெளிப்படுத்தியது.
அதே சூட்டோடு கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தையும் கூட்டியது. திமுகவின் கோபத்தை உணர்ந்த கட்சி மேலிடம்கூட்டணி ஆட்சி என்று பேச யாருக்கும் கட்சி மேலிடம் அதிகாரம் கொடுக்கவில்லை என்று அறிவித்தது. அத்தோடு நில்லாமல் திமுகதலைவர் கருணாநிதியுடன், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொலைபேசியில் பேசி சமாதானப்படுத்தினர்.
இந் நிலையில் காங்கிரஸ் மேலிட ஆதரவுடன்தான் இளங்கோவன் அவ்வாறு பேசியதாக ஒரு தரப்பினர் தற்போது கூறுகின்றனர். தமிழககாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் கட்சி மேலிடத்திடம் அடுத்த சட்டசபைத் தேர்தலிலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில்முக்கியத்துவம் கிடைக்க சில வேலைகளில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதற்காகவே, கூட்டணி ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை அவர்கள் மேலிடத்திற்கு எடுத்துக் கூறியுள்ளனர். தேர்தல் நெருங்கும்சமயத்தில் இவ்வாறு கூறுவதை விட இப்போதே அதை எழுப்புவது சரியானதாக இருக்கும், கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் அதுஉற்சாகத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் மேலிடத்திடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
அந்த கோரிக்கையிைல் நியாயம் இருப்பதை உணர்ந்தே, திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட இளங்கோவன் மூலம் இந்தகோரிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ மேலிடம்.
ஒருவேளை இந்தக் கோஷத்திற்கு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் ஒரு அறிக்கை, தொலைபேசி அழைப்புகள் மூலம் திமுக மேலிடத்தைசமாதானப்படுத்தி விடலாம் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த அடிப்படையில்தான் இளங்கோவனும், சுதர்சன நாச்சியப்பனும் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை வலுவாக எடுத்து வைத்தார்கள்என்று கூறப்படுகிறது.
ஆதரவை கண்டிப்பாக திமுக வாபஸ் பெறாது, சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் மத்திய அமைச்சர் பதவியில் நீடிப்பது எவ்வளவுமுக்கியம் என்பது திமுகவுக்குத் தெரியும். எனவே நாம் எவ்வளவுதான் கோஷம் போட்டாலும் அதனால் நமது ஆட்சிக்கு நிச்சயம் ஆபத்துவராது என்று தெரிந்து கொண்டுதான் காங்கிரஸ் தலைவர்கள் வலுவாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தொடர்ந்து வைத்துவந்துள்ளார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கூறுகிறார்கள்.
அதேசமயம் இன்னொரு கோணத்திலும் இளங்கோவன் குறித்துக் கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள், தங்களது தலைவருக்குமாநில தலைவர் பதவியுடன் சேர்த்து மத்திய அமைச்சர் பதவியும் தர வேண்டும் என்று மேலிடத்தை வற்புறுத்தி வந்தனர்.
ஒருவேளை வாசன் மத்திய அமைச்சராக்கப்பட்டால், இளங்கோவனுடைய பதவியை பறித்துத்தான் ஆக்கப்படுவார் என்று கட்சிக்குள்பேச்சு எழுந்தது. இதைத் தடுக்கவே இளங்கோவன் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் என்றுகூறுகிறார்கள்.
தனது அமைச்சர் பதவி பறிக்கப்படுவதைத் தவிர்க்கவே இளங்கோவன் இந்த உத்தியைக் கையாண்டார் என்றும் கூறப்படுகிறது.
எப்படியோ, இளங்கோவனுடைய கோஷம், திமுக மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை. முன்பு போலதிமுக, காங்கிரஸ் உறவு இனி இருக்குமா என்ற கேள்விக்குறியும் பெரிதாக எழுந்துள்ளது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் ஒரே ஒரு தலைவர் மட்டும் மிக்க சந்தோஷத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தலைவர் வேறுயாருமல்ல, முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications