தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சென்னை:
தமிழக அரசு வழங்கும் முதியோர், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மணியார்டர் மூலம் அனுப்பப்படும்உதவித்தொகையை கையாடல் செய்யும் தபால் துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி சட்டசபையில் எச்சரித்தார்.
இதுகுறித்து அதிமுக உறுப்பினர் சேகர்பாபு கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தமிழக அரசு வழங்கும்உதவித்தொகை மணியார்டர் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பபடுகிறது.
இதுபோல அனுப்பப்படும் பணம் சேலம் மாவட்டம் வாழப்பாடி, சென்னை பெரம்பூர், புரசைவாக்கம், கோட்டை,தண்டையார் பேட்டை ஆகிய பகுதிகளிலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலும் தபால் துறைஊழியர்களால் கையாடல் செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
வாழப்பாடியில்தான் அதிக அளவாக 176 பேரின் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூ. 10,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தையும் பறிமுதல் செய்யநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு தபால் ஊழியர் தானாகவே முன் வந்து பணத்தை கொடுத்து விட்டார். மீதப் பணத்தையும்கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.
போளூரில் நடந்த மோசடி குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார்களில் உண்மை இருந்தால் அவர்கள் மீதும் குற்றவியல்நடவடிக்கைஎடுக்கப்படும்.
உதவித் தொகையை மணியார்டருக்குப் பதில் வங்கிகள் மூலம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications