கருணாநிதியுடன் இளங்கோவன் சந்திப்பு: பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சந்தித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தான்பேசியது குறித்து விளக்கினார்.
சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இளங்கோவன்பேசுகையில் திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதைத் தொடர்ந்து இளங்கோவனை கடுமையாக கண்டித்த திமுக, அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றியது. இதனால் பிரச்சினை மேலும் வலுத்தது.
இந் நிலையில் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய பிரமதர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர்அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருணாநிதியை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் சர்ச்சையில் சிக்கிய இளங்கோவன் இன்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துப்பேசினார். சுமார் முக்கால் மணி நேரம் இருவரும் பேசினர். அப்போது தான் பேசியது குறித்து இளங்கோவன் கருணாநிதியிடம் விளக்கிக்கூறினார்.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்என்ற அடிப்படையில், எல்லாம் சுமூகமாக முடிந்துள்ளது.
எனவே இந்தச் சூழ்நிலையில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்து விட்டது. அதற்குஇப்போது அவசியம் இல்லை. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வரும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும் என்றார்.
பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கருணாநிதியை சந்தித்தேன். நடந்தசம்பவம் குறித்து விளக்கிக் கூறினேன். அவரும் புரிந்து கொண்டார். இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications