திமுக-காங் மோதல் ஒரு நாடகம்: பாஜக
திருவண்ணாமலை:
திமுக-காங்கிரஸ் மோதல் ஒரு நாடகம் தான் என பாஜக கூறியுள்ளது.
திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம்கூறியதாவது:
இன்றைய தேதியில் பாஜகவுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படும்கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம்.
தேர்தலின்போது அதிக இடங்களை கேட்டு வாங்குவதற்கு முன்னோட்டமாகத் தான் கூட்டணி ஆட்சி பற்றி பேசுகிறார்கள். தமிழகத்துக்குகூட்டணி ஆட்சியெல்லாம் ஒத்து வராது. தனிக் கட்சி ஆட்சி தான் சரிப்பட்டு வரும். தமிழக மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்.யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை எல்லாம் இங்கு வரவே வராது.
கூட்டணி ஆட்சி விஷயத்தில் திமுக-காங்கிரஸ் மோதல் ஒரு நாடகம் தான்.
மத்திய அமைச்சரவையில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டால் அவர் தியாகிகள் பட்டியலில் இடம் பெறுவார். அதே போல மத்தியஅரசில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டால், தனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை திமுக காட்டிக் கொள்ளலாம்.
எங்களுடன் திமுக கூட்டணி வைத்தபோது 3 வருடம் கழித்துத் தான் பிரச்சனை தந்தது. ஆனால், காங்கிரசுக்கு ஒரு வருடத்துக்குள்ளேயேபிரச்சனை தந்துவிட்டது.
தமிழ்ப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை மிரட்டுகிறார்.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டுவதெல்லாம் இயலாத காரியம். டாக்டர் ராமதாஸை மிரட்டுவதற்காகவே அவர்அப்படிக் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் அவர் வெற்றியடைய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். விஜய்காந்த் கட்சியால்மக்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்றார் இல.கணேசன்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications