ஜெ.வின் புகார்: கருணாநிதி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

ராணுவ வீரர்களை குறை கூறிப் பேசிய ஜெயலலிதாவைக் கண்டித்து திமுக கூறிய கருத்துக்கு பழைய கதையைமீண்டும் கிளப்பியுள்ள ஜெயலலிதா, தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

சுனாமியால் இறந்தவர்களின் அழுகிய உடல்களை தொட ராணுவத்தினர் மறுத்தனர் என்று சட்டப் பேரவையில்முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னார். அதைப் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, ஜெயலலிதாவின்குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அதுபற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நான் பதில் அளித்தேன்.

பாதுகாப்புத் துறையின் சார்பில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ மையத்தின் கர்னல் லெப்டினென்ட் ஜெனரல்சோப்ரா, சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது அழுகியநிலையில் கிடந்த மனித உடல்களை அப்புறப்படுத்தினர்.

ராணுவத்தினர் இவ்வளவு பணிகள் செய்தும் கூட இறந்தவர்களின் உடலைக் கூட ராணுவத்தினர் தொடவில்லைஎன்று சட்டசபையில் முதல்வர் பேசியது எங்களுக்கு வேதனை தருகிறது. ராணுவத்தினர் மீட்புப் பணியில்ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் கூட எங்களிடம் உள்ளது.

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வமுடன் வரும் இந்த நேரத்தில் அவர்களை கொச்சைப்படுத்துவதை எங்களால்ஏற்க முடியாது. ராணுவத்தினர் பற்றி முதல்வர் அபாண்டமாக கூறியது வீரர்களை சங்கடப்படுத்தியுள்ளது என்றுகூறி அனைத்து ஏடுகளிலும் அந்த மறுப்புச் செய்தி வெளிவந்தது.

ராணுவ அதிகாரியின் இந்த மறுப்புக்கு நேற்று வரையில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பிலோ அல்லது அரசின்சார்பில் அதிகாரிகளோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே நேற்று சட்டப் பேரவையில் திமுக கழகத்தின் சார்பில் பேசிய மீ.ஆ. வைத்தியலிங்கம் அதைப் பற்றிக்குறிப்பிட்டு முதலமைச்சரிடம் இதற்கான விளக்கத்தை அளிக்கக் கோரினார்.

இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடையை நிலையை விளக்க வேண்டிய ஜெயலலிதா,அதை விட்டு விட்டுக் கிடைத்த வாய்ப்பினை வேறு விதமாகத் திருப்பி இலங்கையிலிருந்து வந்த இந்தியராணுவத்தை திமு கழக ஆட்சியில் ஏன் வரவேற்கப் போகவில்லை என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புநடைபெற்ற சம்பவத்தைத் தேவையில்லாமல் அங்கே இழுத்து பிரச்சினையை திசை திருப்பி கழக உறுப்பினர்களைஅவையிலிருந்து வெளியேற்ற வைத்திருக்கிறார்.

நடுநிலையோடு சிந்திக்கின்ற யாராக இருந்தாலும் ஒரு முதலமைச்சர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ராணுவ அதிகாரி அளித்த மறுப்புக்கு பதில் சொல்லியிருக்க வேண்டுமேயில்லாமல், பிரச்சினையைத்திசை திருப்பி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்திருக்க வேண்டியதில்லை என்றுதான் சொல்லுவார்கள்.

சுமூகமாக முடிந்திருக்க வேண்டிய ஒரு விவாதத்தில், தேவையில்லாமல் தன் சுயரூபத்தை ஜெயலலிதாகாட்டியிருக்க வேண்டியதில்லை. குழப்பத்தையும், கூண்டோடு திமுகவினரையும் வெளியேற்றியதையும்தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+