சங்கர மட வழக்கறிஞர்களுக்கு முன் ஜாமீன்
சென்னை:
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில் சங்கர மட வழக்கறிஞர்கள் 3 பேருக்கும் செங்கல்பட்டுநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதில் ஜெயேந்திரருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீனை நேற்று வழங்கியது.
ரவி சுப்பிரமணியத்தை சிறைக்குச் சென்று மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம்,ரேவதி, நசீராா பானு ஆகியோர் மீது காஞ்சி தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே நசீரா பானு முன் ஜாமீன் பெற்று விட்டார்.
ஜெயேந்திரருக்கு நிபந்தனை:
இந்த வழக்கில் ஜெயேந்திரருக்கு நேற்று உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் காஞ்சிபுரம் போலீஸார் முன் விஜயேந்திரர்ஆஜராக வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றநிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி சிங்காரவேலு.
3 வக்கீல்களுக்கும் முன் ஜாமீன்:
இதேபோல வழக்கறிஞர்கள் ரேவதி, தியாகராஜன், சண்முகம் ஆகிய மூன்று பேருக்கும் செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் கூறுகையில்,
ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக அவரது மனைவி சித்ரா கூறியிருக்கும் புகார் பொய்யானது. சிறைஅதிகாரிகள் முன்னிலையில்தான் ரவி சுப்பிரமணியத்தை ரேவதி சந்தித்துப் பேசினார்.
ரவி சுப்பிரமணியத்தை அவர் மிரட்டியிருந்தால் அதை சிறை அதிகாரிகள்தான் முதலில் புகாராக கூறியிருக்கவேண்டும்.
சண்முகம், தியாகராஜன் இருவரும் மூத்த வழக்கறிஞர்கள். பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.ஜெயேந்திரர் வழக்கை ஆரம்பத்திலிருந்து நடத்தி வருபவர்கள். எனவே அவர்கள் இத்தகைய வேலையில்ஈடுபட்டிருக்க முடியாது என்றனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்பர் அலி,
சண்முகம், தியாகராஜன் இருவரும் மூத்த வழக்கறிஞர்கள். ரேவதியும் ஒரு வழக்கறிஞர். அவர்களது வாதங்களைஏற்றுக் கொள்கிறேன். அவர்களது முன் ஜாமீன் மனுக்களை ஏற்கிறேன்.
மூத்த வழக்கறிஞர்கள் இருவரும் குற்றவியல் சட்டம் 438(2) பிரிவின் கீழ் நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். போலீஸார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்.
ரேவதி, நான்கு வாரங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்குகிறேன் என்றார் நீதிபதி அக்பர் அலி.
ஜெயேந்திரரும் 5 வழக்குகளும்:
ஜெயேந்திரர் இதுவரை மொத்தம் 5 வழக்குகளில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்.
இதில் சங்கரராமன் கொலை, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்குகளில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
சங்கர மடக் கணக்குகளை திருத்திய வழக்கு, திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கு, ரவிசுப்பிரமணியத்தை மிரட்டிய வழக்கு ஆகியவற்றில் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications