சிபு சோரன் டிஸ்மிஸ்: முண்டா மீண்டும் முதல்வர்
ராஞ்சி & டெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரன் அரசை டிஸ்மிஸ் செய்வது என நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபு சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அர்ஜூன் முண்டா இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ்- முக்தி மோர்ச்சா கூட்டணியின் தலைவர்சிபு சோரன் முதல்வராகப் பதவியேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கவர்னர் சையது ராஸியின் உத்தரவுப்படி சிபு சோரன், 15ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11ம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நிரூபிக்க வேண்டும்என உத்தரவிட்டது.
இதையொட்டி ஜார்கண்ட் அமைச்சரவை 10ம் தேதி கூடியது. அன்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இதன் பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக சட்டசபை கூடியது. ஆனால் அடுத்தடுத்து ரகளை ஏற்பட்டதால்பலமுறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 15ம் தேதிக்கு சட்டசபையை தற்காலிக சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று சிபு சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவில்லை. இதனையடுததுஜார்கண்ட் பிரச்சினையில் அரசியல் சட்டசிக்கல் எழுந்தது.
இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு அவசரமாக அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையைக்கூட்டி ஜார்கண்ட் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் சிபு சோரன் அரசை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பபட்டது. இந்த தகவலை கூட்டம்முடிந்தததும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். இதனையடுத்து சிபு சோரன் தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
இந் நிலையில் புதிய முதல்வராக தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றத் தலைவர் அர்ஜூன் முண்டா இன்றுபதவியேற்கிறார். இவர் சட்டசபையில் தனது பெரும்பான்மையை வரும் 21ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர்உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications