ஸ்டாலின் மீது வழக்கு?: சட்டசபையில் திமுக கடும் அமளி
சென்னை:
மு.க.ஸ்டாலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால், சட்டசபையில் திமுகஎம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் காளிமுத்துவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த நான்கு திமுக எம்.எல்.ஏக்கள்வெளியேற்றப்பட்டனர்.
தன் மீது பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். பின்னர் அதன் மீது விவாதம் தொடங்கியது.
திமுக உறுப்பினர் ஜே.அன்பழகன் பேசுகையில், ஆளும்கட்சிக்கு ஆதரவாக போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.கருணாநிதியின் குடும்பத்தில் மோதல் நடப்பதாக புரளி பரப்புகின்றனர். தர்மபுரியில் மாணவிகள் சென்ற பஸ்ஸை அதிமுகவினர்எரிந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும் எம்.ஜி.ஆர். குறித்தும் சிலகருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். விலகியதாக, வரலாறு தெரியாமல் உறுப்பினர்கூறுகிறார். உண்மையில் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கியது கருணாநிதிதான்.
அதனால்தான் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரை திமுகவினரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, கோட்டைக்குள்நுழைய முடியவில்லை என்றார்.
அப்போது எழுந்த அதிமுக உறுப்பினர் சேகர் பாபு, கடந்த வாரம் திமுக எம்.எல்.ஏக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர்.அவர்களை போலீஸார் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சுனில்குமார் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை, திமுக உறுப்பினர் ஸ்டாலின் தாக்கினார். அதற்கான ஆதாரமாக இந்தபுகைப்படத்தை அவையில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறி ஒரு பத்திரிக்கைப் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, காவல்துறையினர் மீதான தாக்குதலை எந்தக் காரணத்தைக் கொண்டும்அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
சேகர்பாபு கூறுவது குறித்து விசாரிக்க உத்தரவிடப்படும். உண்மையாக இருக்கும்பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அது எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுகவை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். அப்போதுஎழுந்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,
ஒரு உறுப்பினர் குறித்து புகார் கூற வேண்டுமானால் அதுகுறித்து முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டாமா? என்று கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா எழுந்து, கடந்த 1998ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையாளிகளுடன் நான் இருந்ததாக கூறி திமுகவினர்சட்டசபையில் புகைப்படத்தைக் காட்டினர். அப்போது திமுகவினர் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்களா? அப்போது ஒருநியாயம், இப்போது ஒரு நியாயமா? என்று கேட்டார்.
அப்போது எழுந்த திமுகவினர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்கஅனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால், இதற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி மறுத்தார்.
இதையடுத்து திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக பாய்ந்து சென்று அவரைகடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். அவருக்கு ஆதரவாக மேலும் சில திமுக உறுப்பினர்கள் பேசினார்.
இதை எதிர்த்து அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும் பேச அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்காடு வீராசாமி,துரைமுருகன் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியும் திமுக உறுப்பினர்கள் அமரவில்லை.
இதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களான அன்பழகன், ரங்கநாதன், பரணிக்குமார், அசோகன் ஆகியோரை வெளியேற்றுமாறுஅவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உதத்ரவிட்டார். அதன்படி நான்கு பேரையும் காவலர்கள் குண்டுக் கட்டாகத் தூக்கிவெளியேற்றினர்.
அப்போது எழுந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இந்த அவையில் ஜனநாயக விதிகளுக்கு இடமே இல்லை என்று கூறியபடியேவெளிநடப்பு செய்தனர். இதையடுத்து திமுக, பாமக உறுப்பினர்களும் வெளியேறினர்.
சிபிஎம் உறுப்பினர் ஹேமச்சந்திரன், சிபிஐ உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் பேசுகையில், அவையில் உள்ள ஒரு உறுப்பினர் மீதுஇன்னொரு உறுப்பினர் புகார் சொல்வதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. உறுப்பினர்களின் உரிமைகளை காக்க வேண்டியகடமை சபாநாயகருக்கு உண்டு என்றனர்.
இதற்கு பதிலளித்த காளிமுத்து, அதிமுக உறுப்பினர் சேகர் பாபு இது குறித்துப் பேச வெள்ளிக்கிழமையே என்னிடம் அனுமதிகேட்டார். நான் தான் அவரை இன்று பேசச் சொன்னேன். இந்த விஷயத்தில் யாரையாவது குறை சொல்வதாக இருந்தால் அதுஎன்னைத் தான் சொல்ல வேண்டும் என்றார்.
முன்னதாக அமளிக்கிடையே பேசிய ஸ்டாலின், எனக்கு எதிராக படம் வெளியிட்டுள்ள அந்தப் பத்திரிக்கை வழக்கமாகவேஎனக்கு எதிராகத் தான் செய்தி போடும் வழக்கமுடையது. ஏற்கனவே அந்தப் பத்திரிக்கை மீது நான் மானநஷ்ட வழக்குபோட்டுள்ளேன்.
எந்த போலீஸ் அதிகாரியிடமும் நான் தவறாக நடக்கவில்லை. அன்றைய தினம் எங்களை கைது செய்வதாகவும், பின்னர் இல்லைஎன்று சொல்லியும் அலைகழித்த போலீசாரிடம் கேள்வி கேட்டேன் அவ்வளவு தான். இந்த விஷயத்தில் என் மீது வழக்குப் போடவிரும்பினால் தாரளமாகக் போடலாம். எந்த தண்டனையையும் அனுபவிக்க நான் தயார் என்றார்.
சட்டசபைக் கூட்டத் தொடங்கிய நாள் முதல் தினசரி திமுகவினர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications