ஊனமுற்றோருக்கு அதிக இடஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு
சென்னை:
ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைத் திட்டங்களையும் வேலை வாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீட்டையும் தமிழக அரசுஅறிவித்துள்ளது.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம்:
ஊனமுற்றோர் நலன் மீது நான் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறேன். ஊனம் ஏற்படாமல் தடுக்க வேண்டும், அதை மீறிஊனம் ஏற்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவ வேண்டும்.
அதன் அடிப்படையில் ஊனமுற்றவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள், திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.
2001ம் ஆண்டில் எனது அரசு பதவியேற்றபோது தமிழகம் மிக மோசமான நிதி நிலையில் இருந்தது. இதனால் அரசுத்துறையில்காலியாக உள்ள பதவிகளுக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி ஆணை பிறப்பித்தோம்.
இருப்பினும் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், அந்தத் தடை ஆணையை தளர்த்தி, அரசுத்துறையில்பி மற்றும் சி பிரிவில் காலியாக உள்ள 150 பணியிடங்களுக்கு பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோரைக் கொண்டு நிரப்புமுடிவு செய்துள்ளேன்.
இதன்படி பியூன்கள், டைப்பிஸ்ட், வரவேற்பாளர், டெலிபோன் ஆபரேட்டர், நூலக உதவியாளர், இசை ஆசிரியர்,ஸ்டெனாகிராபர், தையல் பயிற்சியாளர், தொழில்கல்வி ஆசிரியர், மின்தூக்கி இயக்குனர், புத்தகம் கட்டுவோர், பொருத்துனர், மின்வாரியத்தில் மீட்டர் ரீடிங் கணக்கெடுப்பாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 150 இடங்கள் ஊனமுற்றோரைக் கொண்டுநிரப்பப்படும்.
மேலும் அரசுத் துறையில் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள பணியிடங்களில் பார்வையற்றோர், கை, கால் ஊனமடைந்தோர்,செவித்திறன் குறைந்தார், வாய் பேச முடியாதோர் ஆகியோரைக் கொண்டு எந்தெந்த இடங்களை நிரப்பலாம் என்பது குறித்துஆராய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 117 வகையான பணியிடங்களை இதுபோன்ற ஊனமுற்றோரைக் கொண்டுநிரப்பலாம் என பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பணியிடங்களில் 3 சதவீத வேலை வாய்ப்பு இனிமேல் ஊனமுற்றோருக்கே வழங்கப்படும். இதற்கான இட ஒதுக்கீட்டுஆணை பிறப்பிக்கப்படும்.
தகுதி வாய்ந்த பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றவர்கள் 2:1 என்ற விகிதாச்சாரத்தில் 5 ஆண்டு ஒப்பந்தப்படி அரசுக்கல்லூரிகளில் லெக்சரர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்கள் தொகுப்பூதியமாக மாதம் ரூ. 6,000 வழங்கப்படும்.ஐந்தாண்டுகளுக்குப் பின் இவர்களது பணி நிரந்தரமாக்கப்படும்.
இதே போல 150 பார்வையற்றோர், ஊனமுற்றோர், சிறப்புத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும், 2:1 என்ற விகிதாச்சாரத்தில்இளநிலை பள்ளி உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதம் ரூ. 4,000 ஊதியம் வழங்கப்படும்.ஒப்பந்தக் காலத்துப் பின் இவர்களது பணி நிரந்தரமாக்கப்படும்.
பார்வையற்றோர் பெரும்பாலும் தமிழ் மற்றும் வராற்றுப் பாடத்திலேயே அதிக அளவில் தகுதி பெற்றுள்ளதால், இந்தப்பிரிவுகளிலேயே அதிக காலி இடங்கள் உருவாக்கப்படும்.
இதே போல வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 50சதவீதம் அதிகரிக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு அல்லது அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை இந்த உதவித் தொகைவழங்கப்படும்.
ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையிலும் இவர்களுக்கு சில பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். ஊனமுற்றோர் நலனைக் காக்கும்அரணாக எனது அரசு விளங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications