போலீஸ் காவலில் பாடகர் மனோ மகன்!
சென்னை:
இணைய தளம் மூலம் ஆபாச இ-மெயில்களை அனுப்பி ஆண்கள் மற்றும் பெண்களிடம், பாலியல் மற்றும் பண மோசடிசெய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகனை போலீஸார் தங்கள் காவலில் எடுத்துவிசாரித்து வருகின்றனர்.
மனோவின் மகன் ஷகீர், அவரது நண்பர்கள் ஹரி, மனோகரன், ஷாவன் சுதாகர், விஜய் பிரேம் ஆகியோரை போலீஸார் சமீபத்தில்கைது செய்தனர்.
இவர்கள் இணைய தளம் மூலம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஆபாச இ-மெயில் அனுப்பி அவர்களை ரகசிய இடத்திற்குவரவழைத்து மிரட்டிப் பணம் பறித்தும், பெண்களை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக புகைப்படம் எடுத்தும்,பாலியல்ரீதியில் துன்புறுத்தியும் வந்தது தெரியவந்தது.
இவர்களிடம் சிக்கி 20க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் ஏமாந்து தங்களது கற்பையும், பணத்தையும் பறிகொடுத்துள்ளனர். இந்த ஐந்து பேரிடமும் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவர்களை போலீஸ் காவலில் எடுக்கஅனுமதிக்கக் கோரி எழும்பூர் 14வது குற்றவியல் நீதிபதியிடம் காவல்துறை தரப்பில் மனு செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை 18ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ஐந்து பேரையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
எத்தனை பெண்களிடம் பாலியல் மோசடி நடந்தது, எத்தனை பேரிடம் பணம், நகை பறிக்கப்பட்டது என்பது குறித்துஇவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications