சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: ஜெ அறிவிப்பு
சென்னை:
சத்துணவு திட்ட அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கையை வாசித்தார்.
அதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையல்காரர்கள் ஆகியோரது கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரூ.330 வரை ஊதிய உயர்வை பட்ஜெட்டில் அறிவித்தோம்.
அதேபோல, பணியாளர் பணிக்கொடைக்காக, அரசின் பங்களிப்புத் தொகையை ரூ. 5000ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்த்திபட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந் நிலையில் சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும் அடித்தட்டு நிலையில்தான் இருக்கிறார்கள்என்பதால் தங்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்தது.
இக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து தற்போது அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், மாதம் தலா ரூ. 322 ரூபாய் ஊதிய உயர்வுஅளிக்கப்படுகிறது.
இதன் மூலம் இதுவரை மாதம் ரூ. 1,513 ஊதியம் பெற்று வந்த இவர்கள், இனிமேல் ரூ. 1,835 ஊதியம் பெறுவார்கள். இதன் மூலம்84,473 ஊழியர்கள் பயன்பெறுவர். அரசுக்கு கூடுதலாக ரூ. 32.64 கோடி செலவாகும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை விட தமிழகத்தில் தான் சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அதிகஊதியம் பெறுகிறார்கள் என்றார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications