2,000 கிமீ பாயும் ஏவுகணை: பாக் சோதனை
இஸ்லாமாபாத்:
2,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கக்கூடிய அணுகுண்டு ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
கடந்த வருடம் இந்தியா, கண்டம் விட்டு பாய்ந்து சென்று தாக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.இந் நிலையில் தொடர்ந்து பாகிஸ்தானும் 2,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கக் கூடிய ஷகீன் 2 என்ற அணுகுண்டு ஏவுகணையைவெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளை பாராட்டினார். இந்த நீண்ட தூரம்தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணையால் இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் தாக்கமுடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சீனா, ஈரானுக்கு அணு ஏவுகணை தந்த உக்ரைன்:
இதற்கிடையே சீனாவுக்கும் ஈரானுக்கும் அணு குண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் மிக்க அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைசட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
கூடவே அணு ஆயுதங்களையும் சேர்ந்துக் கொடுத்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முந்தைய சோவியத் யூனியன் நாடான உக்ரைனிடம் சோவியத் கால அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள்குவிந்து கிடக்கின்றன. இதில் 3,500 கி.மீ. தொலைவுக்கு அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் எக்ஸ்-55 ஏவுகணைகளைசீனாவுக்கும் ஈரானுக்கும் அந் நாடு வழங்கியது.
இது சர்வதேச அணு ஆயுத, ஏவுகணை பரவல் சட்ட விதிகளுக்குப் புறம்பாக ரகசியமாக நடந்த ஏற்றுமதியாகும்.
சீனாவுக்கு 18 ஏவுகணைகளும், ஈரானுக்கு 12 ஏவுகணைகளும் வழங்கியதை நீண்ட காலமாக உக்ரைன் மறுத்து வந்தது.இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய அரசு ஏவுகணைகள் வழங்கியதை புதிய அரசுவெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
ஏவுகணைகளோடு அணு ஆயுதங்களையும் முந்தைய உக்ரைன் அரசு வழங்கியதா என்பது குறித்து விசாரணைக்கும்உத்தரவிட்டுள்ளது.
3,500 கி.மீ பாயும் திறன் உள்ளதால், இதைக் கொண்டு அமெரிக்காவின் கூட்டாளியான ஜப்பானைத் தாக்க சீனாவால் முடியும்.
அதேபோல இன்னொரு அமெரிக்க கூட்டாளியான இஸ்ரேலைத் தாக்க ஈரானால் முடியும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications