11 கோரிக்கைகள் என்னாச்சு? கருணாநிதிக்கு ஜெ. பதிலடி
சென்னை
மத்திய அரசுக்கு திமுக கூட்டணி முன்வைத்த 11 கோரிக்கைகளில் ஒன்று கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லையே, இதற்குதிமுக தலைவர் கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே சனிக்கிழமை நடந்த நான்கு வழிப் பாதை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய கருணாநதி, திமுகஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், மக்கள்நிலத் திட்டங்களில் அதிமுக அரசு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுசெப்டம்பர் 7ம் தேதி கருணாநிதி தலைமையில் கூட்டப்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் மத்திய அரசிடம்வலியுறுத்திப் பெற வேண்டிய 11 கோரிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதை செயலாக்க செயலாக்கக் குழுவும்அமைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டி கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் அதற்குப் பிறகு தனக்கு வேண்டிய துறைகளை அடம் பிடித்து, சண்டை போட்டு, காங்கிரஸிடமிருந்து பெற்றுக் கொண்டகருணாநிதியும், அலங்காரப் பொம்மைகள் போல மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12அமைச்சர்களும் சேர்ந்து, கடந்த 6 மாதமாக இந்த 11 கோரிக்கைகளை நிறைவேற்ற என்ன செய்தார்கள் என்பதை மக்களுக்குவிளக்க முடியுமா?
தங்களுக்கு வேண்டிய துறைகளை சண்டித்தனம் செய்து கேட்டுப் பெற முடிந்த இவர்களால் 6 மாதமாகியும் இந்தக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதது ஏன்? கிணற்றில் போடப்பட்ட கற்களாக இவை அனைத்தும் அப்படியே கிடக்கின்றன.
இதேபோல, நதி நீர் இணைப்புத் திட்டம், எண்ணூ
மாநில அரசைக் குறை கூறுவதிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கும் கருணாநிதியும், அவரது கூட்டாளிகளும், இந்தத்திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசிடம் சண்டை போடட்டும்.
கச்சத் தீவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எம்.பிக்கள் குழுவை அமைக்கக் கோரினேன். அதையும் மத்திய அரசு செய்யவில்லை.விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சிலரை பல நாள் ஏமாற்றலாம், பலரைசில நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும், எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. இதை திமுக கூட்டணியில் உணர வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications