மோடி முஸ்லீம்களுக்கு எதிரானவர் அல்ல: நாயுடு
சென்னை:
நரேந்திர மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று சில முட்டாள்கள் தான் கூறுகின்றனர் என பாஜக மாஜி தலைவரான வெங்கையாநாயுடு கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய காப்புரிமை (பேடண்ட்) சட்டத்தால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பயங்கரமாக உயரும்.கேன்சர், இதய நோய்க்கான மருந்துகள் இப்போது ரூ. 12,000க்கு விற்கப்படுகிறது. இதன் விலை அமெரிக்காவுக்கு இணையாக ரூ. 1.2லட்சமாக உயரும் அபாயம் உள்ளது.
இதனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படப் போகிறார்கள்.
சாதாரண மக்களுக்கு எதிரான இந்த காப்புரிமை சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவு செய்திருப்பதுவருத்தத்துக்குரியது. இதன்மூலம் மக்களை கம்யூனிஸ்டுகள் நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்.
பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 1,690 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் நெடு நாட்களாகத் தேங்கிக் கிடந்த6,07,262 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 4 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த நீதிமன்றங்களுக்கு காங்கிரஸ்அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.இதனால் வரும் மார்ச் 31ம் தேதியோடு அவை மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனே தலையிட்டு நிதிஒதுக்க வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். அவருக்கு அமெரிக்கா விசா மறுத்தது கண்டிக்கத்தக்கது. அவர்மீது வழக்கோ, எப்ஐஆரோ, விசாரணையோ அல்ல. விசாவை மறுக்க அமெரிக்கா சொல்லும் காரணம் ஏற்கத்தக்கதல்ல.
மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று சில முட்டாள்கள் தான் கூறுகின்றனர் என்றார் நாயுடு.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications