ஜெயலட்சுமி: சிபிஐ 2வது குற்றப்பத்திரிக்கை
மதுரை:
ஜெயலட்சுமி தொடர்பான இரண்டாவது வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அடுத்த வாரம் சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யவுள்ளனர்.
ஏட்டு முதல் எஸ்.பி வரை 20க்கும் மேற்பட்ட போலீஸார் மீது செக்ஸ் புகார் கூறிய ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். ஜெயலட்சுமி கூறிய பாலியல் புகார்களை ஒரு வழக்காகவும், ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார்கடத்தியது தொடர்பான புகாரை இன்னொரு தனி வழக்காகவும் விசாரித்து வருகிறது சிபிஐ.
இதில் முதல் வழக்கில் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந் நிலையில்ஜெயலட்சுமியை காக்கிச் சட்டைகள் கூட்டு சேர்ந்து கடத்திய வழக்கிலும் அடுத்த வாரம் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்படவுள்ளது.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டுள்ளதால், அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதிகோரி அரசுக்கு சிபிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் டி.எஸ்.பி. பதவிக்குக் கீழே உள்ளோர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசு அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசுபதில் அனுப்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குற்றப் பத்திரிக்கையை தாக்கலாகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஷாஜகான், ஏட்டுகண்ணன் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஜெயலட்சுமி பாலியல் புகார்களைக் கூறிய காவல்துறை அதிகாரிகள் மீதான விரிவான விசாரணை அறிக்கை ஏப்ரல் 4ம்தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications