ஆங்கிலம் படித்தால் தப்பில்லை - ஜெயகாந்தன்
சென்னை:
பேராசிரியர் அ.சீனிவாச ராகவனின் நூல் தொகுப்பு (மொத்தம் 7 தொகுதிகள்) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் நூல் தொகுப்பை வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஜெயகாந்தன் சிறப்புரையாற்றினார். ஆங்கில மொழி மீது யாரும் வெறுப்பு கொள்ளத் தேவையில்லை என்பதைஅழகாக எடுத்துரைத்தார் ஜெயகாந்தன். அவர் பேசியதாவது:
அ.சீனிவாசராகவன், ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். சிறந்த கவிஞர், கட்டுரையாளர். அவர் பேசுவதை கேட்டுக் கொண்டேஇருக்கலாம். அதாவது, எம்.எஸ்.சுப்புலட்சமியன் கச்சேரியைக் கேட்பது போல அ.சீ.ரா பேசுவது அவ்வளவு இனிமையாகஇருக்கும். அவர் ஞானபீட விருது பெறத் தகுதியானவர். அவருக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டும்.
கவிதை படித்தால், தமிழ் புரிந்து, அதன் மேன்மை புரியும். அதேசமயம், ஆங்கிலம் படிக்கவும் அஞ்சக் கூடாது. நிறைய பேர்கூறுகிறார்கள், ஆங்கிலம் படித்தால் தமிழறிவு குறைந்து விடும், சரளம் வராது, புலமை குறையும் என்கிறார்கள். அது முற்றிலும்தவறு. ஆங்கிலம் படிப்பதால் தமிழறிவு குறைந்து விடாது.
தினசரி நாம் எதையாவது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்பவராக நாம் இருக்க வேண்டும். நான் அனைத்தும்கற்றவன், கற்பிக்க வந்தவன் என்று யாராவது சொன்னால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
பார்க்க கற்றுக் கொண்டால் கடவுளையும் பார்க்கலாம். அ.சீ.ரா, எழுதியதை விட அவரது எழுத்துக்களைத் தொகுத்துவெளியிட்டதுதான் மிகப் பெரிய பணி. இதற்கு காரணமானவர்களுக்கு எனது நன்றியும், பாராட்டும் என்றார் ஜெயகாந்தன்.
நிகழ்ச்சியில், அல்லையன்ஸ் பதிப்பகத்தார் சார்பில் ஜெயகாந்தனுக்கு தங்க மோதிரத்தை ரத்தினவேல் பாண்டியன் அணிவித்தார்.












Click it and Unblock the Notifications