ஆதலினால், (காவல் நிலையம் மூலம்) காதல் செய்க...
கோவை:
தாங்கள் காதலிக்கும் நபரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் நிலையங்களில்பெண்கள் பதிவு செய்து வைக்க வேண்டும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட நபர், பெண்களை ஏமாற்ற முயலும்போது அதை தடுக்கமுடியும் என்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி) ஏ.சுப்பிரமணியம் காதலில் உள்ள பெண்களுக்கு அறிவுரைகூறியுள்ளார்.
கோவையில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக் கொலை தடுப்பு கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர்பேசுகையில்,
தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மகளிர் காவல் நிலையங்களில் 11,4000வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது போலீஸார் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதையே இது காட்டுகிறது. பெண் சிசுக்கொலை என்ற வடிவத்திலிருந்து பெண்களுக்குப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இறுதி வரை பல்வேறு விதமான பிரச்சினைகளைஅவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
இதுபோன்ற சமூக அவலங்களைக் கண்டறிந்து தடுக்க போலீஸார் முன் வர வேண்டும். கிராமங்களுக்கு நேரடியாக சென்றுஅங்குள்ள பெண்களின் பிரச்சினைகளை அறிது தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும்.
காதலிக்கும் பெண்கள், தாங்கள் காதலிக்கும் நபர் குறித் தகவல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் காதலித்து விட்டு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற முயன்றால் உரியநடவடிக்கையை உடனடியாக எடுக்க முடியும்.
இதன் மூலம் தேவையில்லா தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்றார் சுப்பிரமணியம்.


Click it and Unblock the Notifications
