டான்சி நிலத்தை ஜெ. திரும்பக் கொடுத்து விட்டாரா?: அரசுக்கு திமுக வழக்கறிஞர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதா திரும்பக் கொடுத்துவிட்டாரா என்று கேட்டு திமுக வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷுக்குக் கடிதம்எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவும் சசிகலாவும் கூட்டாக டான்சி நிலத்தை அடிமாட்டு விலைக்கு அபகரித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தபோது, எந்தவித நிபந்தனையும் இன்று அந்த நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைத்து விடுவதாக உறுதிஅளித்தார் ஜெயலலிதா.

இதையடுத்து அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,

இந்த வழக்கில், ஜெயலலிதா தவறு செய்தாரா இல்லையா என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும். மனசாட்சிக்கு ஜெயலலிதாபதில் சொல்ல வேண்டும் என்று கூறி, அவரை மறைமுகமாக மிகக் கடுமையாகக் கண்டித்து, வழக்கிலிருந்து விடுவித்தனர்.

இந் நிலையில் வழக்கைத் தொடர்ந்த திமுக வழக்கறிஞரும், ஆலந்தூர் நகராட்சித் தலைவருமான ஆர்.எஸ்.பாரதி தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷுக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிப்படி, டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அரசிடம்ஒப்படைத்தாகத் தெரியவில்லை. அதை அவர் டான்சி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டாரா?

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக, இன்னும் 10 நாட்களில் இதுகுறித்து பதில் தெரிவிக்குமாறுகேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

கடந்த அதிமுக ஆட்சியின்போது டான்சி நில பேரம் தொடர்பாக ஆர்.பாரதி வழக்குத் தொடர உதவியாக இருந்த வழக்கறிஞர்சண்முகசுந்தரத்தை ரெளடிகளை விட்டுத் தாக்கியது நினைவுகூறத்தக்கது. குற்றுயிரும் குலையுயிருமாக அவர் மருத்துமனையில்சேர்க்கப்பட்டு உயிர் தப்பினார். ரெளடிகள் தாக்குதலில் அவரது விரல்கள் துண்டாகிப் போயின.

தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு முன்பு தான் சண்முகசுந்தரத்தின் வீட்டிலிருந்து ஆர்.எஸ்.பாரதி கிளம்பிச் சென்றார். இதனால்அவர் உயிர் தப்பினார். தாக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு திமுக ராஜ்யசபா எம்பி பதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ். பாரதி ஆலந்தூர் நகராட்சித் தலைவராக உள்ளார். அந்தப் பகுதியின் கீழ் தான் விவகாரத்துக்கு உள்ளான டான்சி நிலம்உள்ளது.

உறுதியளித்தபடி நிலத்தை ஜெயலலிதா திருப்பி ஒப்படைத்திருக்காவிட்டால், இந்த விஷயத்தை மீண்டும் நீதிமன்றத்துக்குக்கொண்டு செல்ல திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் அறிக்கையை அரசின் விளம்பரத்துறை வெளியிட்டது தொடர்பாக லட்சுமி பிரானேஷுக்கு வழக்கறிஞர் மூலம்திமுக தலைவர் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், பிரானேசுக்கு டான்சி வழக்கிலும் திமுக கடிதம் அனுப்பியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+