பாகிஸ்தானுக்கு எப்-16: இந்தியாவுக்கு எப்-18: இது அமெரிக்கா ஸ்டைல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்குஅதைவிட அதிநவீனமான எப்-18 ரக விமானங்களை வழங்கவும், பிற நவீன ஆயுதங்களைத் தரவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

மேலும் இந்தியாவுக்கு அணு ஆராய்ச்சிக்கான கருவிகள், ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவற்றை வழங்கவும் விண்வெளிஆராய்ச்சியிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அமெரிக்கா முன் வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எப்-16 விபார் விமானங்களை வழங்க இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இந் நிலையில், கடந்தவாரம் வரை பாகிஸ்தானுக்கு போர் விமானம் தருவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறி வந்த அமெரிக்காநேற்று திடீரென எப்-16களை வழங்குவதாக அறிவித்தது.

மொத்தம் 24 விமானங்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவுள்ளன. நியூயார்க்கில் அல்கொய்தா நடத்திய தாக்குதலுக்குப் பின்அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றியாக இந்த விமானங்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு விமானங்கள் வழங்குவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் புஷ் தொலைபேசியில்தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு விமானங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங், தங்களுக்கும் அமெரிக்கா விமானங்களை வழங்கவேண்டும் என கேட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. விமானங்கள் மட்டுமின்றி அணு ஆயுதத் துறையிலும், விண்வெளிஆராய்ச்சியிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட முன் வந்துள்ளது. மேலும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கவும்தயார் என்று கூறியுள்ளது.

எப்-16யை விட அதி நவீனமான எப்-18 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கத் தயார் என அமெரிக்கவெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

21ம் நூற்றாண்டில் இந்தியாவை மிக பலம் வாய்ந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தை அமெரிக்க அதிபர் புஷ்சும்,வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசும் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திட்ட அறிக்கையை சமீபத்தில் இந்தியா வந்த ரைஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியதாகவும்,இந்தியாவுடன் சர்வதேச அளவில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், ராணுவ கூட்டுத் திட்டங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகசிங்கிடம் ரைஸ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்களை உறுதி செய்த இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சர்னா, விரைவில் இந்த விஷயங்கள்குறித்து விவாதிக்க அமெரிக்கக் குழு இந்தியா வரவுள்ளது என்றார்.

மிக்-21 ரக விமானங்களுக்குப் பதிலாக இந்தியா 125 நவீன போர் விமானங்களை வாங்கும் முடிவில் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. இதற்காக ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவும் தனது அதிநவீன விமானங்களை வழங்க முன் வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+