தோல்வி பயத்தில் ஜெ. புலம்பல்: வைகோ
டெல்லி:
வரும் சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்திக்கப் போகிறார் ஜெயலலிதா. அந்தப் பயத்தில்தான் தமிழகத்தைச்சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது அடிப்படையில்லாத புகார்களைக் கூறி வருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
திடீர் பயணமாக டெல்லி வந்த வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,
வேறு வேலையாக டெல்லி வந்தேன். அப்படியே பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்குமா என்று கேட்டபோது உடனடியாக அனுமதிகிடைத்து. அதனால் பார்த்தேன். வேறு விசேஷம் எதுவும் இதில் இல்லை.
தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழக நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறும் புகார்அடிப்படையில்லாதது. போலித்தனமான புகார் இது.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா மிகப் பெரும் தோல்வியை சந்திக்கப் போகிறார். அந்த பயத்தில்தான் இப்படிப் புலம்பிவருகிறார்.
சேதுசமுத்திரத் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்குவது தொடர்பாகபரிசீலிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள்இல்லாமலா நடந்தது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications