சேது சமுத்திர திட்டம்: ப.சி. மீது ஜெ தாக்கு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இத் திட்டத்தை நிறைவேற்றுவதில்காலதாமதத்துக்கு மாநில அரசே காரணம் என்றும் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ப.சிதம்பரம் சமீபத்தில் தமிழகம் வந்தபோது அவரது வழக்கமான பாணியில் தமிழக அரசுக்கு எதிராக, தவறானகுற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
சுனாமி நிவாரண விஷயத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரணம் கிடைக்க விடாமல் தடுத்தார் சிதம்பரம். நிவாரணப் பணிகளைகெடுக்கும் விதத்தில் கீழறுப்பு வேலைகளைச் செய்தார்.
அதே போல கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்த அறிக்கையை உரிய காலத்துக்குள் மாநில அரசு மத்திய அரசிடம்அளிக்கவில்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் சிதம்பரம்.
மேலும் சேது சமுத்திரத் திட்டம் பற்றியும் பேசிவிட்டு, இத் திட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இத்திட்டம் நிறைவேறுவதில் காலதாமதத்துக்கு மாநில அரசே காரணம் என்றும் கூறியுள்ளார்.
பொறுப்பான மத்திய அமைச்சர் இவ்வாறு அபாண்டமாக பேசுவது அவரது பதவியின் தகுதிக்கு சற்றும் நல்லதல்ல. இத் திட்டத்தைநிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசுத் துறைகளுக்குள்ளேயே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
மத்திய அரசு உண்மையில் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே கேள்விக்குரியாய் உள்ளது. இந் நிலையில் தமிழக அரசின்மீது வீண் பழி போடுகிறார் ப.சிதம்பரம்.
இந்தத் திட்டம் நிறைவேற எனது அரசும் நானும் மேற்கொண்ட முயற்சிகளின் வரலாறு ஒருபுறம் இருக்க, இத் திட்டம் குறித்தஆய்வை முடிக்க எடுத்துக் கொள்ளப்படும் காலத்தை, தாமதம் என்று குற்றம் கூறி, அரசியல் ஆதாயம் தேட சிதம்பரம் முயல்வதுஅதிர்ச்சியாக உள்ளது.
இத் திட்டம் கனிவதற்கு தாங்களே காரணம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, பெயர் வாங்க சிதம்பரமும்அவரது கூட்டாளிகளும் மேற்கொண்டு வரும் மலிவான முயற்சி கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications