வைகோ வந்தார்.. வேட்பாளர் வரவில்லை
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து கொட்டும் மழையில் வைகோ பிரசாரம் செய்தார். ஆனால்,அவருடன் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதி வரவில்லை.
இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் முகாமிட்டு மின்னல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடாசலபதியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,கன்னிகைபேரில் கொட்டும் மழையில் பிரசாரத்தை தொடங்கினார்.
அவர் பேசுகையில், பொடா வழக்கில் அடைக்கப்பட்ட நான், வேலூர் சிறையிலிருந்து விடுதலையான உடன் பாராளுமன்றத்தேர்தல் பிரசாரத்தை சிறை வாயிலில் இருந்தே தொடங்கினேன். தமிழகத்தில் உள்ள 215 சட்டசபை தொகுதிகளில் நான் பிரசாரம்செய்தேன். அந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட்ட அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளனர். சட்டசபையில்எதிர்க்கட்சிகளை திட்டியே ஜெயலலிதா காலத்தை கடத்தி வருகிறார்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அடுத்தமுதல்வராக கருணாநிதி பதவியேற்பது உறுதி என்றார்.
திமுகவுக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம் செய்தபோது அக் கட்சியின் வேட்பாளர் வராமல் போனது மதிமுகவினரை கடும்எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications