தேர்தல் பணியில் மத்திய அரசு ஊழியர்கள்: வீடியோவில் பதிவாகிறது வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:


ரெய்டுக்கு கிளம்பும் கே.ஜே. ராவ்

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கைஅளிக்கப்படும் என சிறப்புத் தேர்தல் பார்வையாளரான அதிரடி ராவ் கூறியுள்ளார்.

கடந்த 3 நாட்களாக காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதகளில் அவர் நடத்திய அதிரடி ஆய்வு மற்றும் நடவடிக்கைகளால் பொறிகலங்கிப் போய் நிற்கின்றன அதிமுகவும் திமுகவும்.

குறிப்பாக அதிக அளவில் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிமுக தான் ராவிடம் ரொம்பவே சிக்கித் தவிக்கிறது.

இதற்கிடையே இரு தொகுதிகளிலும் கள்ள ஓட்டையும் போலீஸ் உதவியுடனான முறைகேடுகளையும் தடுக்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவை வீடியோவாக எடுக்க அவர் உத்தரவிடவுள்ளதாகத் தெரிகிறது.


அதிமுகவின் பிரச்சாரத்தில் ஒரு நடன நிகழ்ச்சி

காஞ்சியில் உள்ள 235 வாக்குச் சாவடிகளிலும் கும்மிடிப்பூண்டியில் உள்ள 196 வாக்குச் சாவடிகளிலும் காலை முதல் வாக்குப் பதிவுமுடியும் வரை ஒட்டுமொத்த நடவடிக்கையையும் வீடியோ படம் எடுக்க அவர் உத்தரவிடவுள்ளார். இதன் மூலம் கள்ள ஓட்டுக் கும்பலைத்தடுப்பதோடு, சாவடிக்குள் கலவரம் செய்யும் கோஷ்டிகளைத் தடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதே போல வாக்குச் சாவடிகளுக்கு வெளியிலும் வீடியோ கிராபர்களை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். மேலும் வாக்குச் சாவடியில்தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்தவும், வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயும் வெளியிலும் போலீசாருடன் மத்தியப்படையினரை நிறுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

நேற்று மாலை காஞ்சியில் இருந்து சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 3 நாட்களாக இரு தொகுதிகளிலும் ஆய்வு செய்தேன்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளை ஆக்கிரமித்தும், பொது இடங்களிலும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும்இடையூறாகவும் அலுவலகங்கள் அமைத்தும், கட் அவுட்டுகள் வைத்தும், பேனர்களைக் கட்டியும் இருந்தனர். இவற்றை அகற்றஉத்தரவிட்டுள்ளேன்.

தொகுதிக்குள் தேர்தல் பணியில் அனுமதியில்லாமல் செயல்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காகவெளியூர்களிலிருந்து ஆட்களை கொண்டு வரக் கூடாது, திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கவும் கூடாது.

இன்னும் ஓரிரு நாட்களில், எனது அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்தில் கொடுப்பேன். ஹைதராபாத் சென்று விட்டு மீண்டும்காஞ்சிபுரம் வருகிறேன். இடைத் தேர்தல் முடியும் வரை இந்த இரு தொகுதிகளிலும்தான் இருப்பேன் என்றார் ராவ்.

ராவ் இன்றும் காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

ஒரு நாள் முதல்வர் ஸ்டைலில் ராவ் அதிரடி: தப்பி ஓடிய அமைச்சர், கலங்கிய காக்கிகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+