For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நாள் முதல்வர் ஸ்டைலில் ராவ் அதிரடி: தப்பி ஓடிய அமைச்சர், கலங்கிய காக்கிகள்

By Staff
Google Oneindia Tamil News

கும்மிடிப்பூண்டி:

K J Raoகும்மிடிப்பூண்டியில் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் ஆணைய சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவ், விதிமுறைகளை மீறியவாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

அதேபோல, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் டிஜிட்டல் பேனர்கள், கூம்பு ஒலிபெருக்கிஆகியவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அதிமுக தேர்தல் அலுவலகத்தையும், லாரியில் அள்ளிப் போட்டுச் செல்ல வைத்தார்.

புதன்கிழமை சென்னை வந்த கே.ஜே.ராவ், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாஉள்ளிட்டோருடன் பேச்சு நடதிதனார். அதன் பின்னர் காஞ்சிபுரம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு போஸ்ட் கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை இழுத்து எம்ஜிஆர் பாட்டு போட்டு ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தஅதிமுகவினரப் பிடித்தார். விதிமுறைகளை மீறி அதிமுகவினரும் திமுகவினரும் வைத்திருந்த பேனர்கள், கட்டியிருந்ததோரணங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட திமுக, அதிமுகவினரின் வாகனங்கைளயும் பறிமுதல் செய்தார். தேர்தல் பிரச்சாரத்துக்காகவெளி ஊர்களில் இருந்து லாரிகளில் அதிமுகவினரால் கொண்டு வரப்பட்ட பெண்களை அப்படியே திருப்பி அனுப்பினார்.

காஞ்சிபுரம் ஆய்வை முடித்துக் கொண்டு கும்மிடிப்பூண்டிக்கு வந்தார் ராவ் அங்கும் அதிரடியில் இறங்கியுள்ளார்.

திருவள்ளூரில் ஆட்சித் தலைவர் தங்கச்சாமி, எஸ்.பி. வரதராஜு உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய பின்னர்கும்மிடிப்பூண்டி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுடன் சென்ற ராவுக்குப் பின்னால் வந்த வேனில் 50க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர். பேனர்கள், கட் அவுட்டுகள்,தோரணங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்காக அவர்களையும் ராவ் உடன் அழைத்துச் சென்றார்.

தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் ராவ் வந்தபோது, எதிரே இரட்டை இலைச் சின்னம் வரையப்பட்ட கார் வந்தது.

இதையடுத்து அந்தக் காரை தடுத்து நிறுத்திய ராவ், சின்னம் வரைய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். இல்லைஎன்று காரில் உள்ளவர்கள் கூறியதால், காரைப் பறிமுதல் செய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு (வெங்கல்) கொண்டுசெல்ல உத்தரவிட்டார்.

இது அதிமுக கரை வேட்டிகளுக்கு புது அனுபவமாக இருந்ததால், மிரண்டு போய் நின்றனர்.

அதேபோல, பாகல்மேடு பகுதியில் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் 2 கார்களுடன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து, கார்களைப் பயன்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டார் ராவ்.

இப்போதுதான் வந்தேன் என்று செல்வேந்திரன் பதில் அளித்ததை ஏற்க மறுத்த ராவ், எப்போது தொகுதிக்குள் வந்தாலும்அனுமதியுடன்தான் வர வேண்டும் என்று கூறி 2 கார்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதனால் திமுகவினர்பேயறைந்தது மாதிரி நின்றனர்.

அதன் பின்னர் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அதிமுக தேர்தல் அலுவலகத்தை அடைந்த அவர்,அனுமதியுடன்தான் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டார். இதற்கு அதிமுக தொண்டர்கள் தரப்பில் சரியானபதில் கிடைக்கவில்ல. மண்டையை சொறிந்தபடி நின்றனர்.

இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டிகள், பேனர்கள் ஆகியவற்றை அப்படியே அகற்றி லாரியில் அள்ளிப் போடச்சொன்னார். இதையடுத்து அதிமுக அலுவலகம் குப்பை மாதிரி அள்ளிச் செல்லப்பட்டது.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக கொடிகள் மட்டும் பறக்கிறது, அதை அகற்ற ஏன் உத்தரவிடவில்லை என்றுகோஷமிட்டனர். பாரபட்சம் இல்லாமல் அனைத்து விதிமீறல்களும் தடுக்கப்படும் என்று கூறிய ராவ், அங்கிருந்து சென்றார்.

பின்னர் பெருமாள் காலனி பகுதியில் வைக்கப்பட்டிருந்த திருமாவளவனின் கட் அவுட்டை அகற்ற உத்தரவிட்டார். அந்தசமயத்தில் உதயசூயன் சின்னத்துடன் வந்த வேனை தடுத்தி நிறுத்தி பிரசாரத்திற்கு அனுமதி இருக்கிறதா என்று கேட்டு, இல்லைஎன்று அவர்கள் கூறியதால், அந்த வேனையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் ராவ். வெங்கல் பகுதியில் சாலையோரம் இருந்தஅதிமுக தேர்தல் அலுவலகத்தில் பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரே காட்டுக் கத்தலாக எம்ஜிஆர் பாட்டை பாட விட்டுக் கொண்டிருந்தனர் அதிமுகவினர். அந்த இடத்திற்குச் சென்ற ராவ்,ஒலிபெருக்கி வைக்க அனுமதி உள்ளதா என்று அதிமுகவினரிடம் கேட்டார். 12ம் தேதி வரை ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளதாக கூறி ஒரு சீட்டைக் காட்டினர் அதிமுகவினர்.

இதையடுத்து எஸ்.பி. வரதராஜுவிடம் ஒலிபெருக்கி வைக்க அனுமதி கொடுத்ததது தொடர்பாக பல்வேறு கேள்விகளைக்கேட்டார் ராவ். இவ்வளவு பெரிய மைக்குகளுக்கு எப்படி அனுமதி தந்தீர்கள் என ராவ் கேட்டபோது. எஸ்பிக்கு வியர்த்தது.

இதுதொடர்பான அனுமதிச் சீட்டின் நகல் எங்கே என்று கேட்டார். இன்ஸ்பெக்டரிடம் இருக்கு சார் என எஸ்பி சொல்ல, நேராககாவல் நிலையத்திற்குச் சென்றார் ராவ். இதை எஸ்பி உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருக்குப் பின்னால் காரில் ஓடினார்.

காவல் நிலையம் சென்ற ராவ், இன்ஸ்பெக்டர் எங்கே என்று அங்கிருந்த காவலர்களிடம் கேட்டார். இப்போது வந்து விடுவார்என்று அவர்கள் பதில் கூறவே, அவர் வரும் வரை காத்திருக்கப் போவதாக கூறி காவல் நிலையத்திலேயே உட்கார்ந்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் மைக் மூலம் அங்கே இங்கே தகவல் கொடுத்து இன்ஸ்பெக்டர் அப்துல் ரசாக்கை வரவழைத்தனர். கால்மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரிடம், அதிமுகவினருக்கு ஒலிபெருக்கி வைக்க கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டைக் காட்டுமாறு கூறினார் ராவ். அவரும்பைல்களில் தேடிப் பார்த்தார். ரொம்ப நேரமாகதேடியும் அது கிடைக்கவில்லை. ஆனாலும் ராவ் போகாமல் நின்றுகொண்டிருந்தார்.

ராசாக் ரொம்பவே திணறிப் போய் ஒரு வழியாக அந்த உத்தரவை தேடிக் கண்டுபிடித்துத் தந்தார்.

அதை வாங்கிப் படித்துப் பார்த்த ராவ், இதுபோல அனுமதி தந்தது சட்டவிரோதம். உடனடியாக அதை ரத்து செய்யுங்கள் என்றுஉத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். ராவின் இந்த அதிரடியால் விக்கித்துப் போய் நின்றனர் போலீசார்.

வேறு பகுதிக்கு ஆய்வுக்காக அவர் சென்றபோது வழியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவன் வேனில் பெய உலக்கைகட்டப்பட்டிருந்ததைப் பார்த்து வேனை நறுத்தி இது என்ன, எதற்காக கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். சொந்தஉபயோகத்திற்காக கொண்டு செல்வதாக வேட்பாளர் கூறவே, இதுபோல றைகேடாக நிடந்தால் கடும் நிடவடிக்கை எடுக்கப்படும்என்று எச்சத்து விட்டுச் சென்றார்.

அதே போல டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பிரமாண்ட டிஜிட்டல் பேனரை அகற்ற உத்தரவிட்டார்.விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளரை ஆதரித்து கால்வாய் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்து எறியச்சொன்னார்.

வட மதுரையில் ஒரு வீட்டின் முன்பு அதிமுக எம்.எல்.ஏ. ராஜாங்கம் என்பவரின் தலைமையில் பெரும் கூட்டம் கூடியிருந்தது.கூட்டத்தைப் பார்த்த ராவ் அங்கே சென்று எதற்காக கூடியுள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது வீட்டின் உரிமையாளர், எனதுபேத்திக்கு காது குத்து, அதற்காக வந்துள்ளார்கள் என்றார்.

எப்போது காது குத்து முடியும் என்று ராவ் கேட்டபோது, நாளை முடியும் என்றார் அவர். இதையடுத்து அனைவரையும்அப்படியே வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதிகாரிகள் அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்துவுடன், காதுகுத்துக்குவந்ததாக நின்ற கும்பலில் இருந்த பலர் அலறிக் கொண்டு ஓடினர்.

காரணம், காதுகுத்து என்ற பெயரில் கள்ள ஓட்டுக்கு அழைத்து வரப்பட்ட கும்பல் இது.

ராவ் இந்த விசாரணையில் ஈடுபட்டபோது அமைச்சர் தளவாய் சுந்தரம் அந்தப் பக்கம் பிரச்சாரத்துக்கு வந்து கொண்டிருந்தார்.ஆனால் ராவ் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் வண்டியைத் திருப்பிக் கொண்டு ஓடினார் தளவாய்.

தொடர்ந்து அதிரடி ஆய்வை மேற்கொண்ட ராவ், மதிமுக கொடிக் கம்பங்கள், காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்பங்கள், சோனியாகாந்தியின் பிரமாண்ட கட் அவுட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வைக்ப்பட்டிருந்தவற்றை அகற்றஉத்தரவிட்டார்.

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் காரையும் நிறுத்தி அனுமதி உள்ளதா என்று கேட்டு, அனுமதி இருந்ததால் செல்லஅனுமதித்தார். அதேபோல அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் காரும் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

முதல்வன் படத்தின் ஒரு நாள் முதல்வர் ஸ்டைலில் ஆன் த ஸ்பாட் ஆக்ஷனில் இறங்கிய ராவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால்கரைவேட்டிகளும் காக்கிச் சட்டைகளும் படாதபாடு பட்டுவிட்டன.

ராவின் அதிரடி காரணமாக தங்களது வாகனங்களில் இருந்து கொடிகளைக் அமைச்சர்களும் அதிமுகவினரும் கழற்றிப்போட்டுவிட்டு சுற்ற ஆரம்பித்துள்ளனர். அதே போல திமுகவினரின் வாகனங்களிலும் கொடிகள் காணாமல் போயுள்ளன.

வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்க ஆரம்பித்துள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களைக் கூட்டி வந்துகல்யாண மண்டபங்கள், வீடுகளைப் பிடித்து தங்க வைத்து கள்ள ஓட்டு போடும் திட்டத்தில் இருந்த கரைவேட்டிகள் ராவின்கண்காணிப்பு காரணமாக மண்டை காய்ந்து போய் அலைகின்றனர்.

இதற்கிடையே நேற்று முன் தினம் காஞ்சியிலும் நேற்றும் கும்மிடிப்பூண்டியிலும் தனது அதிரடியால் கலக்கிய ராவ் இன்று மீண்டும்காஞ்சி சென்றார்.

காஞ்சிபுரத்தில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட அவர் தனது உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார்.

இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ராவ், நான் நேற்று முன் தினம் அகற்றச் சொன்ன அதிமுக பேனர் எங்கேஎன்று கேட்டார்.

அதற்கு மாவட்ட எஸ்பி சமுத்திரப்பாண்டி, சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதில் சொன்னார். இதையடுத்து தேர்தல் அதிகாரிஅன்பழகனை தொலைபேசியில் பிடித்த ராவ், அவரிடம் விளக்கம் கேட்டார். அவரும் பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

இதையடுத்து, நான் சொல்கிற உத்தரவைக் கூட அமலாக்க மறுக்கிறீர்கள்... இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறி விட்டு அடுத்தஇடத்திற்குக் கிளம்பிச் சென்றார். அவரது இந்தக் கருத்து போலீஸ், அரசு அதிகாரிகளை உதறலில் ஆழ்த்தியது. அவர்உத்தரவிட்டால், இவர்களது வேலைக்கே கூட ஆப்பு வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சாலையில் அனுமதியில்லாமல் கட்சிக் கொடியை கட்டிச் சென்ற வேனை தடுத்தி நிறுத்தி அதைப் பறிமுதல் செய்யஉத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X