IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜூன் 15ம் தேதி மாலை 3.30 மணி மதல் 5 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது பெங்களூர் ஜிகனியில் உள்ள நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
எச்சிஎல் அலுவலகத்தில் இருந்து தற்போது செமி வாய்ஸ் புராசஸ் - எம்எம் சர்ட்டிபிகேஷன் (Semi Voice Process- MM Certification/Knowledge (Material Master) - Bengaluru) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருப்பதோடு எம்எம் சர்ட்டிபிகேஷன் (மேட்டிரிய் மாஸ்டர்) வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுபற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் SAP பற்றிய அறிவு இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் வெண்டார் மாஸ்டர், கஸ்டமர் மாஸ்டர், புராடக்ட் மாஸ்டர், பிரைசிங் மாஸ்டர் உள்ளிட்டவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி இருக்கும். இதனால் விண்ணப்பம் செய்வோர் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 15ம் தேதி மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் ஜிகனியில் உள்ள ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications