திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம் திமுக எதிர்பாராத விதமாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக முதல்வராக இருந்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இந்த தோல்வியை திமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை. சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணத்தை கண்டறிய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து ரகசிய அறிக்கையை கட்சி தலைமையிடம் இன்று பெட்டி பெட்டியாக சமர்ப்பித்துள்ளது.
1967 ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தை திமுக, அதிமுக என்று இருதிராவிட கட்சிகள் தான் மாறிமாறி ஆட்சி செய்து வந்தன. முதல் முறையாக தற்போது இருகட்சிகளையும் வீழ்த்தி தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். அதுவும் கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே இந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டி உள்ளார்.

சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை பிடித்து தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் ,காங்கிரஸ், ஐ .யூ. எம். எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் எப்படியாவது வென்று 2வது முறையாக ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், விடியல் பயணம், கல்லூரி பயிலும் மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் நிச்சயம் கைக்கொடுக்கும் என்று நினைத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. குறிப்பாக முதல்வராக தேர்தலை சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் வீழ்ந்தார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தோல்வியை திமுகவினரால் ஏற்க முடியவில்லை. இதனால் உடனடியாக முக ஸ்டாலின் தோல்விக்கான காரணத்தை அறிய 36 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவினர் தொகுதி வாரியாக சென்று காரணத்தை அறிந்து அறிக்கையாக தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை பெட்டி பெட்டியாக சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் பல நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்களும் தங்களின் தொகுதியில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றிய விவரங்களை வழங்கி உள்ளனர். இதனை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை திமுக எடுக்க உள்ளது.
திமுகவின் இந்த நடவடிக்கைக்கு மத்தியில் அந்த கட்சி சட்டசபை தேர்தலில் தோற்பதற்கு என்ன காரணம்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுபற்றி இங்கே கமெண்ட்டாக தெரிவியுங்கள்.
-
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications