இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படாது என்று அங்கு ஆட்சி செய்யும் பாஜக அரசு அறிவித்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறி ஆதார் கார்டு பெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக அசாமில் சட்டவிரோதமாக குடியேறிபவர்களை தடுத்து நிறுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அசாமில் குடியேறுபவர்கள் ஆதார் அட்டை பெறுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இநு்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார்.
இதுபற்றி முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ''18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டாம் என்று அசாம் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்கள் எவருக்கும் ஆதார் அட்டை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பழங்குடியினர் (ST), பட்டியலினத்தவர் (SC) மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் 2027 வரை ஆதார் அட்டை வழங்கப்படும். வரும் 2027 ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த தடை முழுமையாக அமலுக்கு வரும். அதன்பிறகு தேயிலை தோட்டம் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
இருப்பினும், தவிர்க்க முடியாத அசாதாரண சூழ்நிலைகளில் ஆதார் அட்டை வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர் வழியாக மாநில அரசுக்கு கோரிக்கையாக வைக்க வேண்டும். மாநில அரசு ஆய்வு செய்து தகுதியானவர் என்றால் ஆதார் அட்டை வழங்கும். அதேவேளையில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் தொடர்ந்து வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications