தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தீர்ந்து போன சக்தி கிட்டயே திருடுறியே நீ எவ்வளவு காஞ்சுபோன சக்தியாக இருப்ப' என்று முதல்வர் விஜய்யை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக ஐடி விங், தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்... மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்... மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.

TVK hits back at MK Stalin s criticism that Vijay is poaching AIADMK MLAs

எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.

பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.

எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.

வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் பார்ட்டி பண்ட் என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.

எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட காப்பி பேஸ்ட் செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை காப்பி அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.

நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.

பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+