அதிமுகவின் திட்டத்தில் லாரி லாரியாய் மண் அள்ளிப் போட்ட ராவ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சைதாப்பேட்டை, வாணியம்பாடி ஸ்டைலில் பணத்தையும், அரசு இயந்திரத்தையும் வைத்து இடைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்றஅதிமுகவின் கனவில் லாரி, லாரியாக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் ராவ்.

வழக்கமான தனது ஜாலங்கள் இல்லாமல் தேர்தலை எப்படி வெல்வது என்ற யோசனையில் இப்போதே நம்பிக்கை இழந்துவிட்டுத் தான்தேர்தலை அந்தக் கட்சி எதிர்கொள்கிறது.

சென்னை மாநகராட்சி வார்டு எலெக்ஷனுக்கே பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட அதிமுக, இந்த இடைத் தேர்தலில் எந்தஅளவுக்கும் போகும் என்று கணக்கிட்ட திமுகவினர், அதைச் சமாளிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞரணிப் படையினரையும்லோக்கல் குண்டர்களையும் திரட்டிக் கொண்டு வந்து இரு தொகுதிகளிலும் தங்க வைத்திருந்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயர் கராத்தே தியாகராஜன், அடிதடிக்கு பேர் போன சேகர்பாபு உள்ளிட்டோர் தலைமையில் பெரும்படைகள் அதிமுக சார்பிலும் குவிக்கப்பட்டன.

இரு தரப்பினரும் ஒரு பக்கம் முண்டா தட்டிக் கொண்டிருக்க, அமைச்சர்கள் தங்கள் கார்களில் சூட்கேஸ்களுடன் வந்திறங்கி கலக்கினர்.எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், ஆனால் ஜெயிக்க வேண்டும் என்ற உத்தரவு அமைச்சர்களுக்குத் தரப்பட்டுள்ளதாகசொல்கிறார்கள்.

இதனால் கும்மிடிப்பூண்டியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் பொன்னையன் தலைமையில் பணக் கட்டுகளை வாரிஇறைத்தது அதிமுக தலைமை. தினமும் கட்சிக்காரக்களைச் சந்தித்த அமைச்சர்கள் பணத்தை வாரித் தந்து, இதை சாப்டுடாதீங்க.. ஓட்டுபோடறவங்களுக்கு இது போய்ச் சேரணும். ஜெயிச்ச பிறகு உங்களுக்கு நல்ல கவனிப்பு வரும் என்று சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அமைச்சர் நைனார் நாகேந்திரன் இலவச வேட்டி, சேலைகளை இறக்கிவிட, விளையாட்டுத் துரை அமைச்சர் இன்பத்தமினோ கிரிக்கெட்விளையாட்டு சாதனங்கள் அடங்கிய பெரிய பைகளை வீடு, வீடாக சப்ளை செய்தார்.

இதற்கிடையே ஒரு பகுதியில் அரசு மதுபானக் கடைகளைக் காட்டிய ஒரு அமைச்சர், எவ்வளவு வேணுமானாலும் சாப்பிடலாம்.. நாங்கபணம் கட்டிக்குவோம் என்று தண்ணி காட்டிவிட்டுப் போனார்.

பிற அமைச்சர்கள் வீடுகளுக்கு தடாலடியாக நுழைந்து ஆட்களை எண்ணிவிட்டு தலைக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு காசை அள்ளித்தந்துவிட்டு வெளியேறி வந்தனர்.

இவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று கணக்கே போட முடியாத அளவுக்கு பணத்தை வாரி இறைத்தது அதிமுக. அதே போல தேர்தல்தினத்தன்றும் காசை அள்ளிவிட்டு ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்பத் திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக அமைச்சர்கள் தொடர்ந்து டேரா போட்டிருக்க, ஊரைக் காலி செய்துவிட்டு ஓடுமாறு உத்தரவிட்டார் ராவ்.

அதே போல ரொம்ப ஒழுங்கு போல தங்களைக் காட்டிக் கொள்ளும் திமுகவினர், அதிமுகவினரின் அராஜகத்தைத் தடுக்கிறோம் பேர்வழிஎன்ற பெயரில் குண்டர்களைக் கொண்டு வந்து வீடுகளைப் பிடித்து தங்க வைத்து மூன்று வேளையும் கறி சோறு போட்டு ரெடி செய்துகொண்டிருந்தது.

இவர்களையும் அடிக்காத குறையாக விரட்டியடித்திருக்கிறார் ராவ். தாங்கள் விரட்டப்பட்டாலும், திமுகவினர் மகிழ்ச்சியுடன் தான்ஓடுகின்றனர்.

அமைச்சர்கள், வாரியத் தவைலவர்களை விரட்டியதன் மூலம் அதிமுகவினரின் பண பலத்தை ராவ் ஒடுக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன்திமுகவினர் கிளம்பிச் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+