வழுக்கி விழுந்தார் பாபா: கையில் எலும்பு முறிவு
பெங்களூர்:
பெங்களூரில் உள்ள தனது ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வந்த புட்டபர்த்தி சாய்பாபா வழுக்கி விழுந்தார். இதனால் அவரதுஇடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் தனது ஆந்திர ஆஸ்ரமத்தைத் தவிர்த்துவிட்டு பெங்களூர் காடுகோடியில் உள்ள பிரமாண்டமான பிருந்தாவன்ஆஸ்ரமத்தில் சாய் பாபா தங்குவது வழக்கம்.
முன்னதாக கொடைக்கானலில் 10 நாட்கள் ஓய்வெடுத்த பாபா, பின்னர் மதுரையில் சத்யசாய் நகரில் பக்தர்களுக்கு ஆசி அளித்தார்.
இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை பெங்களூர் ஆஸ்ரமத்துக்கு வந்த பாபா, அங்கேயே தங்கியிருந்து காலை மாலை இரு வேளையும்பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
நேற்று முன் தினம் அவர் ஆசி வழங்குவதற்காக சாய் ரமேஷ் அரங்கத்துக்கு வந்தபோது, திடீரென கால் வழுக்கி கீழே விழுந்தார். அப்போதுகையை ஊன்றியதில் அவரது இடது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
பெங்களூரில் தனது ஆஸ்ரமத்தின் அருகிலேயே பாபா மிகப் பெரிய இலவச நவீன மருத்துவமனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் ஓய்வில் இருப்பதால், பக்தர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications