திமுக அரசின் சாதனைகளை தனது அரசின் சாதனைகளாக கூறி மக்களை ஏமாற்ற பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார் முதல்வர்ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுக அரசு நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ததையொட்டி முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிக்கை ஒன்றைவெளியிட்டார்.
அந்த அறிக்கையில், அவர் பட்டியலிட்டிருந்த அதிமுக அரசின் சாதனைகள்:
12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை உள்ள விவசாயிகளின் பயிர்க் கடனுக்குரிய வட்டியை 9 சதவீதமாக குறைத்துள்ளோம்.
11 மற்றும் 12வது வகுப்பு படிக்கும் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் வகுப்பு மகளிர் நலம் பெறும் வகையில் ரூ. 70 கோடி மதிப்பில் உன்னதத் திட்டம்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு அனைத்து நாட்களிலும் இலவச பஸ் பாஸ்.
கல்லூரி மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் கட்டணத்தில் 50 சதவீத சலுகை.
தலைநகர் சென்னையின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், ரூ. 720 கோடியில் புதிய வீராணம் திட்டம்.
திருட்டு விசிடிக்கு முடிவு கட்டி பல்லாயிரக்கணக்கான திரைத் துறைக் குடும்பங்கள் வாழ்வில் வெளிச்சத்தைஏற்படுத்தியுள்ளோம்.
20 ஆண்டு காலமாக பிடிபடாமல் இருந்த இரக்கமற்ற கொலைகாரனும், கொள்ளைக்காரனுமாகிய வீரப்பனை ஒழித்துக் கட்டிஇந்தியாவிற்கு நிம்மதியைத் தந்திருக்கிறோம்.
பெருமைக்குரிய மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறோம்.
நெசவாளர்களுக்கு புதிதாக காப்புறுதித் திட்டம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம், 45,000 விவசாயபம்பு செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் 2லட்சம் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை.
அரசு ஊழியர்கள், ஆசியர்கள் ஆகியோருக்கு 3 சதவீத அகவிலைப் படி உயர்வு, அங்கன்வாடிப் பணியாளர்களுக்குமதிப்பூதியம் உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம்.
86 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1950 கோடி ரூபாயில் புதிய வீடுகள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் காக்க மானியம் மற்றும் வரி விலக்கு.
ஊனற்றோர் நலன் காக்க வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
காவல் துறையினருக்கு ஈட்டுப் படி உயர்வு.
ரூ. 1,350 கோடி முதலீட்டில் சென்னையில் நோக்கியா செல்லிடத் தொலைபேசி தொழிற்சாலை.
இவைகள் எல்லாம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், நாம் எடுத்திருக்கும் இணையற்ற முயற்சிகள் என்றுஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதா பொய் சொல்கிறார்:
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்டு, பின்னர்செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் நிறுத்தி விட்டார் ஜெயலலிதா.
இப்போது மக்களை ஏமாற்ற மீண்டும் அந்தத் திட்டங்களை அறிவித்து விட்டு, தனது அரசின் சாதனைகளாக கூறுகிறார். இதுதான்அதிமுக அரசின் சாதனையா?
சுனாமி நிதியை டெல்லியில் கொடுத்தாலும், அந்த நிதி தமிழகத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிதியை சிலர் சுரண்டல்நிதியாக வாங்கி வாயில் போட்டுக் கொண்டனர்.
சட்டசபை செத்து விட்டது என்று கூறிய தலைவிக்கு, சட்டசபை ஜனநாயகம் குறித்துப் பேச தகுதியும் கிடையாது, அருகதையும்கிடையாது.
ஜெயலலிதாவின் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.