குப்பை லாரி மோதி எம்.ஆர். ராதா பேரன் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரன் லாரி மோதி பலியானார்.

எம்.ஆர்.ராதாவின் மகன் வாசு. சில வருடங்களுக்கு முன் இவர் இறந்தார். இவரது மகன்கள் வாசு விக்ரம் மற்றும் சுரேஷ் பாபு(வயது 28). வாசு விக்ரம் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார். சுரேஷ் பாபு பெங்களூரில் ஒரு ஓட்டலில்கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் இவர் சென்னை வந்தார். நேற்று மோட்டார் பைக்கில் தனது நண்பர் அரவிந்துடன் பாண்டி பஜாருக்குசென்றார்.

அப்போது பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் பெட்ரோல் நிரப்புவதற்காக சுரேஷ் பாபு பைக்கை தள்ளிக் கொண்டுசென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு குப்பை அள்ளும் லாரி சுரேஷ் பாபு மீது மோதியது.

மோதிய அந்த லாரியின் டிரைவர் அதை நிறுத்தாமல் போய்விட்டான்.

இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ் பாபுவின் நண்பர் அரவிந்த் காயமின்றி உயிர் தப்பினார். தனது கண் முன்நண்பரை இழந்த அரவிந்த் கதறி அழுதார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டி பஜார் போலீஸார் சுரேஷ் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+