குமரியில் இன்றும் கடல் கொந்தளிப்பு!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:


கன்னியாகுமரி கடல் பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் கடல் கொந்தளித்து வருகிறது. மேலும் 20 கிராமங்களுக்குள் நீர்புகுந்துள்ளது. அதே போல கேரளாவின் திருச்சூர், கண்ணூர், எர்ணாகுளம் பகுதியிலும் பல இடங்களில் கடரோல கிராமங்களில்இன்று நீர் புகுந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் இரண்டு முறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால், 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் நீர் புகுந்தது.இந்தோனேஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாகவே இந்த ராட்சத அலைகள் உருவானது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால், இந்த முகாம்களிலும் தண்ணீர்புகுந்ததால் மக்கள் விடிய விடிய தூங்காமல் அச்சத்துடன் விழித்திருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கேரளாவின் பல்வேறு கடலோரப் பகுதிகளில்வெள்ளிக்கிழமை காலை முதல் பயங்கர கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியது.

அதிகாலையில் 8 கிராமங்களில் நீர் புகுந்தது. பின்னர் மீண்டும் வந்த ராட்சத அலைகள் 20க்கும் மேற்பட்ட கடலோர மீனவர்கிராமங்களுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓடினர். கட்டு மரங்கள், வள்ளங்கள்,பிளைவுட் வள்ளங்கள் ஆகியவை கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் அலறிக் கொண்டு ஓடியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

நீரோடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், நீரின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டு, அவை பெண்கள் மீது வந்துவிழுந்தன. இதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.


கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று இரவு முழுவதும் தூங்கவில்லை. பாதுகாப்பான இடங்களில்அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ராட்சத அலைகள் இந்த முகாம்களிலும் புகுந்தது.

இதனால் மக்கள் பீதியில் அனைவரும் தூங்காமல் விழித்திருந்தனர்.

இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாக மேலும், 20 கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கடல் பகுதியில் தீவிரமானகொந்தளிப்பு காணப்படுகிறது. அலைகள் 40 அடிக்கும் உயரமாக எழும்பி வருகின்றன. கடல் நீர் ஊருக்குள் புகுந்த வண்ணம்இருப்பதால் மக்கள் கடலோர கிராமங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் சந்தித்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டபகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் தெவிரித்தார்.

அதே போல கேரளாவின் திருச்சூர், கண்ணூர், எர்ணாகுளம் பகுதியிலும் பல இடங்களில் கடரோல கிராமங்களில் இன்று நீர்புகுந்துள்ளது.

பூம்பத்தால் தான் கடல் கொந்தளிப்பு:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாகவே கன்னியாகுமரி மற்றும் கேரளகடல் பகுதியில், கொந்தளிப்பு ஏற்பட்டதாக சென்னை பூகம்பவியல் ஆய்வு மைய அதிகாரி ராவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் சுமத்ரா தீவில் வியாழக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோளில் இது 5.5 புள்ளியாக இருந்தது.

இதன் காரணமாகவே கன்னியாகுமரி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இருப்பினும் இது சுனாமி அலைகள் அல்ல.

கடலுக்குள் நில நடுக்கம், எரிமலை வெடிப்பு ஆகியவை ஏற்படும்போது இதுபோல கடல் கொந்தளிப்பு ஏற்படுவதுவழக்கமானதுதான் என்றார் ராவ்.

குமரி, கேரளாவில் கடல் கொந்தளிப்பு: வீடுகளில் புகுந்த நீர்- மக்கள் ஓட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+