குமரி, கேரளாவில் கடல் கொந்தளிப்பு: வீடுகளில் புகுந்த நீர்- மக்கள் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியிலும் கேரளத்தின் சில பகுதிகளிலும் இன்று காலை கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளுக்குள்கடல் நீர் புகுந்தது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

இன்று காலை 5 மணியளவில் கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டம் துறை பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போதுராட்சத அலைகள் உருவாகி இரயுமன்துறை, சின்னத்துறை, வல்லம்விளை, பூத்துறை, மார்த்தாண்டன் துறை, நீரோடை, பல்லவிளைஉள்ளிட்ட 8 கரையோர கிராமங்களுக்குள் கடல் நீர் வேகமாக புகுந்தது.

சுமார் 300 வீடுகளில் நீர் புகுந்தது. காலை நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தததை பார்த்ததும்தூக்கக் கலக்கத்தில் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

அப்போது தண்ணீரில் தடுமாறி கீழே விழுந்து 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கடல் நீர் புகுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மார்த்தாண்டம் துறை புனித வியாகுல மாதா தேவாலயம் அருகிலும்தண்ணீர் தேங்கி நின்றது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ராட்சத அலைகளால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. சுனாமி அலைகள் வந்துவிட்டதாக பீதி நிலவுகிறது.ஆனால், சுனாமி ஏற்படுத்தும் அளவுக்கு கடலுக்குள் எங்கும் நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 26க்குப் பின் கடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிவதாகவும், சமீப காலமாகவே கடலில் கொந்தளிப்பு அதிகம் உள்ளதாகவும் இப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 17ம் தேதி இரவிலும் இம்மாவட்டத்தில் இரயுமன்துறை பகுதியில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வீடு இடிந்ததில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

இரவு நேரத்தில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் அச்சமடைந்த இப்பகுதி மக்கள், அருகில் இருந்த சர்ச்சுகளில் தஞ்சம் புகுந்தது நினைவுகூறத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே கன்னியாகும மாவட்டத்தின் சில பகுதிகளிலும் தூத்துக்கு, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடல்கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கேரளாவிலும் கடல் கொந்தளிப்பு:

இதே போல கேரளாவின் பல பகுதிகளிலும் இன்று காலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் சிரியேக்கல் என்றஇடத்திலும், பூவார் பகுதியிலும், திருச்சூர் மாவட்டத்தில் பெரிங்கனா என்ற இடத்திலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பூவார் பகுதியில் கடல் நீர் புகுந்ததால் சுமார் 200 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+