நெடுஞ்சாலைத்துறையில் சென்னை மெட்ரோ பிரிவையே மொத்தமாக கலைத்த ஆதவ் அர்ஜுனா.. அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையில் செயல்பட்டு வந்த சென்னை மெட்ரோ சிறப்பு பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு, இனி அனைத்து பணிகளும் ஒருங்கிணைந்த கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன.

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் செயல்திறன் குறைபாடு, தரமற்ற பணிகள், தேவையற்ற அளவில் உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீடுகள், முறையற்ற நிலம் கையகப்படுத்தல் செலவுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Chennai highways Aadhav Arjuna

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகித்து வருகிறார். புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பு, பழைய பணிகளை மறுஆய்வு செய்து, நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறையில் எந்தவொரு டெண்டரும் வெளியிடவில்லை.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நெடுஞ்சாலைத்துறையில் கடந்த ஆட்சியில் "ப்ரீ ஃபிக்ஸ்ட் கமிஷன் முறை" செயல்பட்டதாகக் கூறி, தற்போது நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். பழைய திட்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து விளக்கங்கள் கோரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில் கோயம்பேடு மேம்பாலம், ரூபாய் 1,099 கோடி மதிப்பிலான கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) விரிவாக்கத் திட்டம், மேடவாக்கம், மூலக்கடை, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதையடுத்து, சென்னை பெருநகரத்துக்கென ஒரு பிரத்யேக நெடுஞ்சாலைப் பிரிவு தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவில் போதுமான பணியாளர்கள் உள்ளனர். எனவே, சென்னை மெட்ரோவுக்கு என தனி பிரிவு தேவையில்லை. இது கூடுதல் பணியிடங்கள் தான். பல அதிகாரிகளுக்கு வேலையே இல்லாமல் இருந்தது எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை மெட்ரோ பிரிவு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் தலைமைப் பொறியாளர்கள், பொறியாளர்கள் திருச்சி, மதுரை மற்றும் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இனிமேல், அனைத்துத் திட்டங்களும் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் மூலமாகவே செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+