FIR போடுவதில் கூட சொதப்பல்.. அடிப்படையே தெரியாமல் ஆக்சன்.. எவ வேலு வழக்கில் விஜய் அரசு தோல்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று எவ வேலு வழக்கில் முதல்வர் விஜய் அரசு கடுமையாக உச்ச நீதிமன்றத்தில் சொதப்பியது. வழக்கில் அடிப்படையிலேயே விஜய் அரசு சொதப்பியதே கோர்ட்டில் அவர்களுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது.

விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மீதான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

ev velu

கடந்த 2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் சாலைகள் அமைக்கப்படாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டதாகக் கூறி, இந்த ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஆரம்பக்கட்டத்திலேயே சட்டரீதியான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், அவசர கதியில் விஜய் அரசு எடுத்த தவறான முடிவுகள் தற்போது இந்த வழக்கில் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

ஆளுநர் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்

இந்த வழக்கின் முக்கிய சட்ட சிக்கலே ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A மூலமாக எழுந்துள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு மக்கள் பிரதிநிதி அல்லது அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவோ அல்லது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ தகுதியான அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதாவது மாஜி அமைச்சர் மீது ஆக்சன் எடுக்க ஆளுநர் அனுமதி தர வேண்டும்.

எ.வ.வேலு அமைச்சராக இருந்த காலத்தில் இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக சட்டப்பிரிவு 17A-இன் கீழ் அனுமதி வழங்க வேண்டிய தகுதியான அதிகாரி தமிழக ஆளுநர் மட்டுமே ஆவார்.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுநரிடம் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, தமிழக அரசிடமே நேரடியாக அனுமதியைப் பெற்று அவசர அவசரமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

அரசின் இந்த முதிர்ச்சியற்ற மற்றும் அவசர முடிவைச் சுட்டிக்காட்டி, ஆளுநரின் உரிய அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்ஐ ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, எ.வ.வேலுவைக் கைது செய்ய இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு ஏமாற்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவானது புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எ.வ.வேலுவுக்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்கியது போல உள்ளது.. குறைந்தபட்சம் இரண்டு மூன்று விசாரணைக்கு பின் முன் ஜாமீன் வழங்கி இருக்கலாம் என்று வாதிட்டார். ஆனால், எ.வ.வேலு ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கி வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எ.வ.வேலு தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், இறுதியாக தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விஜய் அரசின் நிர்வாகக் குளறுபடி

இந்த வழக்கின் போக்கானது, புதிய விஜய் அரசின் சட்ட ஆலோசகர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வழிகாட்டுதல்களில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உரிய சட்ட விதிகளையும், ஆளுநரின் அதிகார வரம்பையும் சரியாக ஆராயாமல், அரசியல் ஆதாயத்திற்காக அவசரமாக எடுக்கப்பட்ட இந்த முடிவு, நீதிமன்றத்தில் அரசுக்கு பலத்த பின்னடைவைத் தேடித்தந்துள்ளது.

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாததால், ஒரு முக்கிய வழக்கு ஆரம்ப நிலையிலேயே முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+