குதிரை பேரம் வழக்கு - “சிபிஐ விசாரணை ஏன்?” கேள்வி எழுப்பி தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரித்து வரும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​யராஜாவிடம், தவெக ஆட்​சி​யைக் கவிழ்க்க ஒத்​துழைக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக அவர் அளித்த புகாரின் பேரில், சென்னை திரு​வல்​லிக்கேணி போலீ​சார் வழக்குப்பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

tvk dmk high court

இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் ஆதர​வாளர்​கள் எனக் கூறப்படும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 11 பேர் ஏற்​கெனவே கைது செய்​யப்​பட்​ட நிலை​யில், மதுரை மாவட்​டம் உசிலம்​பட்​டியைச் சேர்ந்த கணேசன் 12வது நபராக கைது செய்​யப்​பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கின் விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் பெயரும் சேர்க்கப்பட்டது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த பேரம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்​கிடையே, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கி​ உத்தரவிட்டது.

எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை தமிழக காவல்துறையிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி, திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்துள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மாநில காவல்துறைக்கு பதிலாக சுயாதீனமான மத்திய அமைப்பு விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று அவரது மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகார் மீது மட்டுமின்றி, குதிரை பேர முயற்சிக்கு ஆளானதாகக் கூறப்படும் பிற எம்எல்ஏக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, "ஊத்தங்கரை எம்.எல்.ஏ அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சமாகச் செயல்படுகின்றனர்" என வாதிட்டார்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த விவகாரத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரினார். இதற்குப் பதில் அளித்து வாதிட்ட தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "பாதிக்கப்பட்ட யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை. மாநில போலீசார் இந்த வழக்கில் பலரைக் கைது செய்து, முறையான ஆதாரங்களைத் திரட்டிச் சரியாக விசாரித்து வருவதால், இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை நடந்து வரும் சூழலில், மற்ற புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டுமே இந்த விசாரணையை மாற்ற வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+