அந்த குழந்தையே நான்தான்.. 19 ஆண்டுகளுக்கு முன் யமாலை தூக்கி குளிப்பாட்டிய மெஸ்ஸி! இதுதான்டா ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி மோதவுள்ளது. இதனால் மெஸ்ஸி vs லமின் யமால் இடையிலான யுத்தம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு முன் லமின் யமாலை தூக்கியபடி யுனிசெஃப் காலண்டர் புகைப்படத்திற்கு மெஸ்ஸி போஸ் கொடுத்துள்ளார். இது உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலிஷ்காரன் படத்தில் சத்யராஜிடம், "அந்த குழந்தையே நீங்கதான் சார்" என்று ஒருவர் கதை சொல்வார். ஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலும் அந்த குழந்தையே நான்தான் என்ற வசனம் பிரபலமாகி வருகிறது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி களமிறங்க உள்ளது.

Lionel Messi

ஸ்பெயின் vs அர்ஜென்டினா என்று சொல்வதை விடவும், யமால் vs மெஸ்ஸி என்று சொல்லலாம். 19 வயதாகும் லமின் யமால் ஸ்பெயின் அணியின் அடையாளமாக இருந்து வருகிறார். இவரும் பார்சிலோனா அணியால் அடையாளம் காணப்பட்டவர். பார்சிலோனா அணிக்காக 15 வயதிலேயே அறிமுகமாகி சாதனை படைத்தவர் யமால். இவரும் மெஸ்ஸியை போலவே இடது கால் ஆட்டக்காரர்.

பார்சிலோனா அணியில் மெஸ்ஸி அணிந்து வந்த 10ஆம் எண் கொண்ட ஜெர்சி, பின்னர் வேறு சில வீரர்களுக்கு சென்றது. ஆனால் அந்த ஜெர்சி எண்ணை அணிந்த பின், அவர்களின் ஆட்டம் மோசமடைந்தது. அப்படியில்லை என்றால் அந்த வீரர்கள் காயம் அடையத் தொடங்கினர். இதனால் யமால் வசம் ஜெர்சி எண் 10 வழங்கப்பட்டது. ஆனால் யமால் அந்த ஜெர்சியை அணிந்த பின் ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார்.

இதனால் பார்சிலோனா ரசிகர்கள் யமாலை, மெஸ்ஸியின் ஜூனியராகவே பார்த்தனர். இந்த நிலையில் லமின் யமாலின் தந்தை ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 19 ஆண்டுகளுக்கு முன் யுனிசெஃப் காலண்டருக்காக மெஸ்ஸி எடுத்த புகைப்படங்கள் அவை.. அந்த புகைப்படத்தில் மெஸ்ஸி ஒரு குழந்தையை தனது கையில் தூக்கியபடி போஸ் கொடுத்திருந்தார்.

அந்த குழந்தை தான் 19 வயதாகும் ஸ்பெயின் வீரரான லமின் யமால். அந்த புகைப்படங்களில் சிலவற்றில் யமாலின் தாயும் இருக்கிறார். இதனால் 19 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் சந்தித்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 ஆண்டுகளுக்கு பின் மெஸ்ஸிஅயி எதிர்த்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் லமின் யமால் களமிறங்குகிறார். இதனால் விதியின் திரைக்கதை அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+