ஆதியின் மகன் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிகேசவனின் மகன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

மோசடி மன்னன் ஆதிகேசவன் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடி வழக்கில் ஆதியின் மகன்சாரதியை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் சாரதி தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஒரு கல்லூரியில் எம்பிஏபடித்து வருவதாகவும், தனது பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் பணம் கொடுத்தவர்களை நான்மிரட்டியதாக கூறி என்னை போலீஸார் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆதிகேசவன் மீது இதுவரை 35க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை வந்த புகாரிலிருந்து அவர் ரூ.5 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பணம் கொடுத்தவர்களை ஆதிகேசவனின் மகன் சாரதி, அடியாட்களுடன் சென்று மிரட்டியுள்ளார். விசாரணை முக்கிய கட்டத்தைநெருங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது மகன் சாரதிக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். சாட்சியங்களைஅவர் கலைத்து விடுவார் என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து சாரதியின் ஜாமீன் மனுவை நீதிபதி சக்கரியா உசேன் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சாரதி இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+