சென்னையை உலுக்கிய திடீர் சூறாவளி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் பலத்த சூறாவளிக் காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதால்பெரும் பீதிஏற்பட்டது.
கத்திரி வெயில் முடிவுக்கு வந்து கொண்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் சென்னை நகரில் திடீரென வானம் இருண்டது. நல்லவெயில் அடித்துக் கொண்டிருந்த போதே, திடீரென வானம் இருண்டதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
சுமார் அரை மணி நேரம் இந்த புழுதிப் புயலும், சூறாவளிக் காற்றும், கடல் கொந்தளிப்பும் நீடித்தது. அரை மணி நேரத்திற்குள்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. முக்கியச் சாலைகள் அனைத்திலும் மண் புழுதிகாணப்பட்டது.
வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாகவே இந்த சூறாவளிக் காற்று வீசியதாகவும், சுனாமிக்கான வாய்ப்புகள் இல்லைஎன்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications