கோவை திமுக மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் திமுக மண்டல 2 நாள் மாநாடு 28ம் தேதி துவங்குகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோவை மண்டல திமுக மாநாடு கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டிலுள்ள அண்ணா நகரில் 28ம் தேதி துவங்குகிறது. முதல்நாள் மாநாடு காலை 9 மணியளவில் நாகூர் அனிபாவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதன் பிறகு மாநாட்டுக்கொடியேற்றப்படும்.

தொடர்ந்து மாநாட்டை நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைக்கிறார். இதன் பிறகு பல்வேறு தலைப்புகளில்திமுக தலைவர்கள் பேசுகிறார்கள். பரிதி இளம்வழுதி, சட்டசபையில் அதிமுக அரசின் மரபு மீறல்கள் குறித்தும், மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் தொலை தொடர்பும் ஊரக பொருளாதாரமும் குறித்தும் பேசுகிறார்கள்.

தொடர்ந்து இரவில் முதன்மை செயலாளர் துரைமுருகன் , பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசுகிறார்கள்.

மறுநாள் (29ம் தேதி) கோ.சி. மணி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, அ. ரகுமான் கான், திருச்சி என். செல்வேந்திரன், வீரபாண்டிஆறுமுகம், பொன்முடி, வெற்றி கொண்டான், கம்பம் பெ. செல்வேந்திரன், வாசுகி ரமணன் மற்றும் பலர் பல்வேறு தலைப்புகளில்பேசுகின்றனர்.

தொடர்ந்து சரத்குமார், நெப்போலியன், வாகை சந்திரசேகர், தியாகு, குமரி முத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். பகல்12.30 மணியளவில் துணை பொதுச் செயலாளர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.

இதன் பிறகு கூட்டணி கட்சித் தலைவர்கள் வாசன், டாக்டர் ராமதாஸ், மதிமுக பொருளாளர் மு. கண்ணப்பன், வரதராஜன், தா.பாண்டியன், கே.எம். காதர் மொகிதீன் ஆர்.எம். வீரப்பன், ஜவாஹிருல்லா, ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், பேராயர்எஸ்ரா சற்குணம் மற்றும் பலர் பேசுகின்றனர்.

இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வரவேற்புக் குழு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, செயலாளர்கள் சுப்புலெட்சுமி ஜெகதீஸன்,கோவை மு. ராமநாதன், என்.கே.பி. ராஜா, செ. காந்தி செல்வன், கா. ராமச்சந்திரன், எம். வீரகோபால் ஆகியோர் செய்துவருகின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி நாளை சென்னையிலிருந்து ரெயில் மூலம் கோவைபுறப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+