ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு: நாளைக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை நாளைக்குஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூர் தனி கோர்ட்டில் நேற்று நடந்தது. ஜெயலலிதாசார்பில் ஆஜரான வக்கீல் ஜோதி, மத்திய அரசின் நேரடி ஒளிபரப்பு உரிமை வழங்குவது தொடர்பான வழக்கு சென்னைஉயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நாளை (இன்று) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, வெள்ளிக்கிழமை இங்கு வந்து வாதாடுங்கள். மாலையில் உங்கள்மனுவை பரிசீலிக்கிறேன் என்று நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து, ஜோதி வாதத்தை தொடர்ந்தார்.
ஜோதி வாதாடி முடித்ததும் தினகரனின் வக்கீல் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அந்தமனுவை நீதிபதி ஏற்க மறுத்தார். ஜோதியும் வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்க கோரினார்.
இதற்கு நீதிபதி, காலையில் சனிக்கிழமை ஒத்திவைக்க கேட்டீர்கள், இப்போது திங்கள் கிழமை கேட்கிறீர்கள். சென்னைஉயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெள்ளிக்கிழமை இங்கு வாருங்கள். கடந்த ஆறு மாதத்தில் இன்று தான் இந்த வழக்கின்விசாரணை ஒரு நாள் முழுவதும் நடந்துள்ளது.
எனவே வழக்கை திங்கள் கிழமை ஒத்திவைக்க முடியாது. வெள்ளிக்கிழமை வாதாடுங்கள். வழக்கை வெள்ளிக்கிழமைக்கு(நாளை) ஒத்திவைக்கிறேன் என்றார்.
இரு வழக்கு சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு
இதற்கிடைய ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் சேர்த்து நடத்துவதற்கு அரசுவக்கீல் ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்தார்.
அரசு வக்கீல் ஆச்சார்யா தனது வாதத்தின் போது, சொத்து குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஒட்டல் வழக்கு இரண்டும் வேறுவேறு வழக்குகள். ஒரே வழக்கு கிடையாது. இதனால், இரு வழக்குகளையும் இணைத்து விசாரிக்கக் கூடாது.
இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த மனு சென்னைஉயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு மனுதாரர் உச்சநீதிமன்றம் சென்றிருக்கலாம்.ஆனால், அவர்கள் செல்லவில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதியாகும். இந்த தீர்ப்பில் தலையிட தனிநீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. இரு வழக்குகளையும் இணைத்து நடத்தக் கோரி ஜெயலலிதா மற்றும் தினகரன் சார்பில்தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடம் பெற்றுள்ள கருத்துகள் ஒன்றாக இல்லை.
மேலும் லண்டன் ஒட்டல் வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சம்பந்தமில்லை. இவ்விரு வழக்குகளையும்இணைத்து நடக்கக் கூடாது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பின்படி, இரு வழக்கையும் தனித்தனியாகநடத்த வேண்டும்.
இரு வழக்குகளையும் தனித்தனியாக நடத்துவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில்சமர்பிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications