போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் இலங்கைப் பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் கனடா செல்ல முயன்ற இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து லண்டன் வழியாக கனடா செல்வதற்காக நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை விமானநிலையத்தில் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் ஏறுவதற்காக இலங்கையை சேர்ந்த சரோஜினி (வயது 46) என்ற பெண்வந்தார்.
சரோஜினியிடம் அதிகாரிகள் விசாரணை செய்த போது, வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் அவர் தனது புகைப்படத்தை ஒட்டிவந்ததை ஒப்புக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சரோஜினியை கைது செய்த போலீஸார் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பிறகு அவர்15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications