நுழைவுத் தேர்வு: ரேங்க் பட்டியல் வெளியிட ராமதாஸ் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்தவில் தேறியவர்களுக்கு ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்குபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக நீக்க வேண்டும். அடுத்தகல்வியாண்டு வரை இதற்காக காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே அதை ஒழித்துக் கட்ட வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைநடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

நுழைவுத் தேர்வு முறையால் ஏழை மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும்மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் அதிக அளவில் நுழைவுத் தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆண்டுக்கு பல லட்சம் செலவு செய்து படிக்கக் கூடிய வசதி படைத்தோர் மட்டுமே பொறியியல் படிப்பை படிக்க முடியும் என்றநிலை உருவாகியுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் நுழைவுத் தேர்வு என்ற முறை மூலம் வடிகட்டப்பட்டு விடுகிறார்கள்.

எனவே நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே ரத்து செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வில் தேறியவர்களின் தர அடிப்படையிலானதர வரிசைப் பட்டியலை ஜூன் 15ம் தேதி வெளியிடப் போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதை எதிர்த்துஜூன் முதல் வாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம்.

எங்களது இந்தப் போராட்டத்தில் நுழைவுத் தேர்வு முறையினால் பாதிக்கப்பட்டு, வாழ்வைப் பறிகொடுத்து நிற்கும் ஏராளமானகிராமப்புற மாணவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+