சுனில்தத் உடல் அடக்கம்: பிரதமர், சோனியா நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Sanjay Dutt
மரணமடைந்த மத்திய அமைச்சர் சுனில் தத்தின் உடலுக்கு அவரது மகன் சஞ்சய் தத் தீ மூட்டினார்.
மத்திய அமைச்சர் சுனில் தத்தின் உடல் அடக்கம் நேற்று மாலை மும்பையில் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி மற்றும் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சுனில் தத் (வயது 75). பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் தந்தையானஇவர், சுமார் 40 வருடங்களாக இந்தித் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

பின்னர் காங்கிரஸில் சேர்ந்த சுனில் தத், 1984ம் ஆண்டு மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்றார். பின்னர் இதே தொகுதியில் 1989 மற்றும் 1991ம் ஆண்டுகளில் போட்டியிட்டுவெற்றி பெற்றார்.

5 முறை எம்.பியாக இருந்த சுனில் தத் ராஜீவ் காந்தியின் நம்பிக்க்ைகு உரியவராக திகழ்ந்தார். இவரது மனைவி தான் மறைந்தபிரபல இந்தி நடிகை நர்கீஸ்.

இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந் நிலையில் நேற்று காலை மும்பையிலுள்ள அவரது வீட்டில் வைத்து மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்புஏற்பட்டு உயிர் பிரிந்தது.

அவரது உடல் அடக்கம் நேற்று மாலை மும்பை புறநகர் பகுதியிலுள்ள சாந்தா குரூஸ் மயானத்தில் நடந்தது. சுனில் தத்தின்உடலுக்கு அவரது மகன் சஞ்சய் தத் தீ மூட்டினார்.

முன்னதாக சுனில் தத் மரணமடைந்தது குறித்து அறிந்த உடன் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,அவரது மகன் ராகுல், மற்றும் மத்திய அமைச்சர்கள் விரைந்து வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைவர்கள் இரங்கல்:

சுனில் தத் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், பல்வேறு திறமைகளைப் பெற்றிருந்த மனிதர் சுனில்தத். தன்னையேஅர்ப்பணித்த சமூக சேவகர், மிகவும் உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட மனிதர் என்ற பல முகங்கள் அவருக்கு உண்டு.

இந்திய சினிமாத் துறையில் புதுமைகளால் புத்துணர்வை ஏற்படுத்தி சகலகலா திறமைகளை வெளிப்படுத்தியவர் சுனில்தத் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள செய்தியில், சுனில் தத்தின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், இந்தித் திரை உலகுக்கும்பேரிழப்பாகும் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரத்தக்களறியாக இருந்த பஞ்சாப் மாநிலத்தில் மரணத்தைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் உயிரைத் துச்சமாக மதித்து நெடுந்தூரம்நடைப்பயணம் மேற்கொண்டார் சுனில்தத்.

ஆரவாரமின்றி நேர்மைக்கு எடுத்துக் காட்டாக அவர் பணியாற்றினார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், பொதுவாழ்வுக்கும் மிகப் பெரிய இழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் ராஜ கண்ணப்பன்உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+