புகை பிடிக்கும் காட்சிக்குத் தடை:திரைத்துறை அதிருப்தி
சென்னை:
திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதற்குதிரைப்படத் துறையினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் தடை செய்யப்படும் என மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதற்கு திரைத் துறையினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
நடிகர் விவேக் கூறுகையில், இந்த முடிவு நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை. பொதுவாக சர்ச்சைக்குரிய, விவாதத்திற்குரியவிஷயம். இப்போது பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை உள்ளது. ஆனால் விற்பதற்கு தடை இல்லை. தடை இருந்தும்எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர் சிகரெட் பிடிக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது திரைப்படங்களில் மட்டும் புகை பிடிக்கக் கூடாது என்று கூறுவது பொருத்தமானதாக இல்லை. சிகெரட்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று அரசு சொல்கிறது. ஆனால் அதே அரசே, புகையிலை, சிகரெட் விற்பனையைதடுக்கவில்லை.
ஹீரோக்களைப் பார்த்துத்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கப் பழகுகிறார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. பிடிக்க வேண்டும்என்று ஒருவர் முடிவு செய்து விட்டால் கண்டிப்பாக அவர் சிகரெட் பிடிப்பார். அதை யாராலும் தடுக்க முடியாது.
ஹீரோக்கள் சிகரெட் மட்டும்தானா பிடிக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களைச் செய்கிறார்கள். அதை யாராவதுபின்பற்றுகிறார்களா? படத்தில் சிகரெட் பிடிப்பது போல நடிக்கும் எத்தனையோ நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் புகையின் பக்கமேபோகாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த முடிவு சரியானது என்று நான் கருதவில்லை என்று கூறுகிறார்விவேக்.
இயக்குநர் பாரதிராஜாவும் இதே கருத்தையே வெளிப்படுத்துகிறார். ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள் என்ற கருத்தைஏற்கவே முடியாது. சினிமாவில் ஹீரோவும், ஹீரோயினும் கவர்ச்சியாக ஆடிப் பாடுகிறார்கள்.அதேபோல,யாராவது தெருவில் வந்து ஆடுகிறார்களா? சிகரெட் பிடிப்பது, ஆரோக்கியக் கேடு என்று மத்தியஅரசு நினைத்தால்முதலில் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். அதை விடுத்து திரைத் துறையை குறி வைக்கக் கூடாது என்றார் காட்டமாக.
அதேசமயம், சத்யராஜ், வடிவேலு உள்ளிட்ட சிலர் இத்தடைக்ைகு வரவேற்பு அளித்துள்ளனர். இது நல்ல விஷயம்தான் என்றுஅவர்கள் கூறுகிறார்கள்.
மத்திய சுகாதாரத்துறையின் இந்த திடீர் தடையுத்தரவு, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை மனதில் வைத்துபிறப்பிக்கப்பட்டுள்ளதாகவே திரைத் துறையினர் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications